புதுடெல்லி: இந்தியாவில் Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது, சுமார் 4 மாதங்கள் காத்திருந்த பிறகு, தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப் போகிறார்கள். ட்விட்டரில் தகவல் அளித்துள்ள ஓலா எலக்ட்ரிக் CEO பவிஷ் அகர்வால், 2021 டிசம்பர் 15 முதல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்கும் என்று கூறியுள்ளார். நிறுவனம் அதன் விநியோகத்தை அக்டோபர் 25 முதல் தொடங்குவதாகவும் பின்னர் நவம்பர் 25 முதல் தொடங்குவதாகவும் கூறியது. Ola S1 இன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாகும், S1 Pro ரூ.1.30 லட்சமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

S1 ப்ரோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும்
ஓலா (Ola) எலக்ட்ரிக் இந்த ஸ்கூட்டரை S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், 2.98 kWh பேட்டரி பேக்குடன் S1 வந்துள்ள நிலையில், S1 Pro 3.97 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. S1-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் மற்றும் S1 ப்ரோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும்.


ALSO READ:Ola அதிரடி: மின்சார பைக்குகள் மற்றும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் விரைவில் அறிமுகம் 


உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலை
இந்த இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள ஓலா எலக்ட்ரிக் (Electric vehicle) ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனம் அதே வளாகத்தில் புதிய ஹைப்பர்சார்ஜரை நிறுவியுள்ளது. 


வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் மற்றும் டச் பாயின்ட்களில் ஹைப்பர்சார்ஜர்கள் நிறுவப்படும் என்று ஓலா எலக்ட்ரிக் சில காலத்திற்கு முன்பு உறுதியளித்தது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த ஆலையானது உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலையாக மாற உள்ளது, தற்போது அதன் கட்டுப்பாட்டை முழுவதுமாக பெண்களே கையாள்கின்றனர்.


ALSO READ:Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR