Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம்

Maruti Suzuki India தனது தயாரிப்பு வரம்பில் அதிக CNG வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, இந்த தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 08:03 PM IST
  • CNG கார்களுக்கான அதிக தேவை உள்ளது.
  • மாருதி கார்களில் CNG ஆப்ஷன் ஏழு மாடல்களில் கிடைக்கிறது.
  • நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மாடலை விரைவில் சிஎன்ஜியில் அறிமுகப்படுத்தக்கூடும்.
Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம்   title=

Maruti Suzuki News: அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் டீசல் கார்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில், CNG கார்களுக்கான அதிக தேவைக்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, Maruti Suzuki India தனது தயாரிப்பு வரம்பில் அதிக CNG வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, இந்த தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

CNG விநியோகஸ்தர்களின் விற்பனை நிலையங்கள் மீது நம்பிக்கை 

செய்தியின்படி, கடந்த நிதியாண்டில் நிறுவனம் சுமார் 1.62 லட்சம் சிஎன்ஜி கார்களை (CNG Cars) விற்பனை செய்துள்ளது. மேலும் சிஎன்ஜி தயாரிப்புகளை கொண்டு வர நாடு முழுவதும் உள்ள சிஎன்ஜி விநியோகஸ்தர்கள் விற்பனை நிலையங்களை விரைவாக விரிவுபடுத்தவும் முனைப்பு கொண்டுள்ளது. 

இந்தச் செய்தியின்படி, விற்பனை வலையமைப்பின் விரிவாக்கத்தில் உற்சாகமடைந்துள்ள மாருதி சுசுகி, 2020-21 நிதியாண்டில் அதன் CNG கார்களின் விற்பனை கிட்டத்தட்ட இரு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

ALSO READ:கார் வாங்கணுமா? அசத்தலான மைலேஜுடன் பட்ஜெட்டுக்குள் வரும் 5 டாப் கார்கள் 

CNG ஆப்ஷன் ஏழு மாடல்களில் கிடைக்கிறது

2021-22 ஆம் ஆண்டில் சுமார் மூன்று லட்சம் சிஎன்ஜி யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என நிறுவனம் எதிர்பார்ப்பதாக மாருதி சுசுகி (Maruti Suzuki) இந்தியா மூத்த நிர்வாக இயக்குநர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

'எங்கள் பல மாடல்களில் இப்போது CNG ஆப்ஷன் இல்லை. நாங்கள் விற்கும் 15 பிராண்டுகளில், CNG ஆப்ஷன் ஏழு மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற வாகனங்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு வர முயற்சிக்கிறோம்.' என்று அவர் கூறினார். இந்நிறுவனம் தற்போது உள்நாட்டு சந்தையில் CNG துறையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த மாருதி கார்கள் சிஎன்ஜி வகையில் கிடைக்கின்றன

மாருதி சுஸுகியின் ஏழு கார்கள் (Cars) இந்திய சந்தையில் சிஎன்ஜி வகையில் கிடைக்கின்றன. இதில் வேகன்ஆர், எர்டிகா, செலிரியோ, ஈகோ, ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ ஆகிய கார்கள் அடங்கும். நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மாடலை விரைவில் சிஎன்ஜியில் அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. மாருதியின் சிஎன்ஜி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.43 லட்சம் ஆகும்.

ALSO READ:Best Mileage தரும் கார் இதுதான்: Maruti-யின் அசத்தலான காரின் புக்கிங் துவங்குகிறது!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News