புதுடெல்லி: நிலநடுக்கத்திற்கு (Earthquake) முன்னர் ஸ்மார்ட்போன் பயனர்களை எச்சரிக்கும் வகையில் பூகம்பத்தைக் கண்டறியும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான அம்சத்தை உருவாக்கியுள்ளதாக கூகிள் (Google) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இன்று முதல், நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசி, Android பூகம்ப எச்சரிக்கை அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க முடியும். இதன் பொருள், உங்கள் Android தொலைபேசி ஒரு மினி Siesmometer-ராக இனி உங்களுக்கு உதவும். மேலும் மில்லியன் கணக்கான பிற Android தொலைபேசிகளுடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பூகம்ப கண்டறிதல் நெட்வொர்க்கை இது உருவாக்குகிறது," என்று கூகிள் செவ்வாயன்று ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளது.


இந்த Android தொலைபேசி நில அதிர்வுகளை கண்காணிக்கும் ஒரு மினி Siesmometer-ராக மாறி மற்ற மில்லியன் கணக்கான பிற Android தொலைபேசிகளுடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய பூகம்பத்தைக் கண்டறியும் வலையமைப்பை உருவாக்குகிறது.


கலிஃபோர்னியாவில் ஏற்கனவே ஒரு பெரிய நில அதிர்வு அடிப்படையிலான அமைப்பு உள்ளதால், அங்கு இந்த பூகம்ப விழிப்பூட்டல்களை முதலில் துவக்கவுள்ளதாக கூகிள் கூறியது.


ALSO READ: தொடர்பில்லா கட்டண வசதிக்கு Paytm அறிமுகப்படுத்துகிறது முதல் Pocket Android POS!!


இந்த ShakeAlert அமைப்பு, USGS, Cal OES, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 க்கும் மேற்பட்ட நில அதிர்வு அளவீடுகளில் இருந்து சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது. சில நொடிகளுக்கு முன் அளிக்கப்படும் எச்சரிக்கை, நாம் நில நடுக்கம் வரும் முன் சுதாரித்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவியாக என்று கூகிள் மேலும் கூறியது.


"எல்லா ஸ்மார்ட்போன்களும் பூகம்பம் நிகழக்கூடும் என்பதைக் குறிக்கும் சிக்னல்களை உணரக்கூடிய சிறிய accelerometers-சுடன் வருகின்றன. ஒரு அதிர்வு பூகம்பமாக இருக்கலாம் என்று தொலைபேசி கண்டறிந்தால், அது எமது பூகம்பத்தைக் கண்டறியும் சேவையகத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. அதோடு அந்த அதிர்வு ஏற்பட்ட இடத்தின் விவரங்களையும் அனுப்புகிறது. சேவையகம் பின்னர் பல தொலைபேசிகளிலிருந்து தகவல்களை இணைத்து உண்மையிலேயே அங்கு பூகம்பம் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறியும்" என்று கூகிள் கூறியது.


Android -ன் தொலைபேசி அடிப்படையிலான பூகம்ப கண்டறிதலைப் பயன்படுத்தி வரும் காலங்களில் மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் பூகம்ப எச்சரிக்கை தகவல்கள் வருவதை பயனர்கள் எதிர்பார்க்கலாம் என்று தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் மேலும் கூறியது.


ALSO READ: Coming soon: விரைவில் WhatsApp-ஐ 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்!!