புதுடில்லி: COVID-19 தொற்றுநோயை அடுத்து, அலுவலகத்தில் இருந்து வேலை செய்யத்  தேவையில்லாத ஊழியர்கள், 2021 ஜூன் 30 ஆம் தேதி வரை Work From Home சலுகையை நீட்டிக்க Google முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Google, 2021 ஜனவரி மாதம் முதல் ஊழியர்கள் அலுவலகங்களில் வேலை செய்வார்கள் என்று கூகுள் முன்னர் அறிவித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

”ஊழியர்களுக்கு முன்னரே திட்டமிடும் திறனை வழங்குவதற்காக, அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத பணிகளுக்காக உலகளவில் இருக்கும் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2021 ஜூன் 30 வரை Work From Home என்ற வசதியை பயன்படுத்திக் கொள்ளும் தெரிவை விரிவுபடுத்துகிறோம்” என்று தற்போது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 
 
முதலில் இந்த செய்தியை வெளியிட்ட The Wall Street Journal  பத்திரிகை, Work From Home-ஐ Google நீட்டிப்பதால் நிறுவனத்தின் சுமார் 2,00,000 ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள் என்று கூறுகிறது.


மாஸ்குகள் மட்டுமே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் உயிர் கவசமாக இருக்காது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், கூடிய வரையிலும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதுமே கொரோனாவுக்கான அருமருந்து என்பதை உணர்த்தும் வகையில் கூகுளின் இந்த முடிவு உள்ளது.


Read Also | சாம்சங் M சீரீஸ் வரிசையில் Galaxy M31s இதோ உங்களுக்காக


அமேசான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், தங்களது ஊழியர்கள் ஜனவரி மாதத்தில் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றுவார்கள் என்று அறிவித்துள்ளன. இந்த நிலையில்  Google-இன் இந்த முடிவு, பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக micro-blogging site Twitter, தனது ஊழியர்கள் விரும்பினால் வீட்டிலிருந்து ‘எப்போதும்’ வேலை செய்ய அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸானது, பணியாளர்களும் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை கண்ணில் பார்க்காமலேயே வேலை செய்யலாம் என்ற தெரிவை தந்துள்ளது.