Google Maps 3D: ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் இந்தியாவில் அறிமுகமானது. மேலும், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களை தரும் புதிய அம்சங்களை இந்தியாவில் கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதோடு, உலகில் மற்ற இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த முறையில் பயணிக்க உதவும் வகையில் மூன்று புதிய அம்சங்களையும் கூகுள் மேப்ஸ் செயலில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 100 மைல்கார்டுகளின் 'ஃபோட்டோரியலிஸ்டிக் வான்வழி காட்சிகளை' வெளியிடுவதாக அறிவித்தது கூகுள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலமான இடங்களின் வான்வழி காட்சி
கூகுள் இன்று உலகெங்கிலும் கிட்டத்தட்ட 100 மைல்கார்டுகளின் 'ஃபோட்டோரியலிஸ்டிக் வான்வழி காட்சிகளை' (photorealistic aerial views) வெளியிடுவதாக அறிவித்தது, இது பில்லியன் கணக்கான உயர் வரையறை வீதிக் காட்சி, செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்களுடன் செயற்கை நுண்ணறிவு AI ஐ அறிமுகப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்று நிறுவனம் கூறுகிறது.


மேலும் படிக்க | 10வது பாஸ் ஆனவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு


கூகுள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Google I/O இல் இந்த அம்சத்தை முதன்முதலில் அறிவித்தது, இப்போது அது பார்சிலோனா, லண்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் பிரபலமான அடையாளங்களுக்காக வெளியிடத் தொடங்கியுள்ளது.


கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-அடிப்படையிலான பயன்பாடுகளில் லாண்ட்மார்க்குகளின் வான்வழி காட்சிகளை உலகளவில் வெளியிடுவதாக கூகுள் கூறியது.


சைக்கிள் ஓட்டும் பாதை தகவல்
சைக்கிள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்காக கூகுள் ஒரு அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. கூகுள் மேப்ஸ் இப்போது சைக்கிள் ஓட்டும் வழித் தடங்கள் தொடர்பான தகவலைக் காண்பிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது, இதில் உங்கள் பாதையில் உள்ள உயரம், போக்குவரத்து நிலைமைகள், குறிப்பாக அதிக கார் போக்குவரத்து, படிக்கட்டுகள் அல்லது செங்குத்தான மலைகள் தொடர்பான தகவல்களையும் தரும்.


இது தவிர, பயணிகள் வழித்தடத்தின் மிக விரிவான போக்குவரத்து நிலைமையை தெரிந்துக் கொள்ள முடியும். இதனால் எந்த வகையான சாலையில் பைக் ஓட்டலாம் என்பது தொடர்பான சிறந்த யோசனையையும் பெற முடியும். வரும் வாரங்களில் சைக்கிள் ஓட்டும் திசைகள் கிடைக்கும் நகரங்களில் இந்த அம்சம் கிடைக்கும்.


மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை


இருப்பிடப் பகிர்வு
கடைசியாக, கூகுள் ஒரு புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸில் கொண்டு வருகிறது, இது பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை அவர்களின் இருப்பிடம் குறித்து தெரியப்படுத்த உதவும். இந்த அம்சத்தின் மூலம், நேசிப்பவர் எப்போது வந்தார் அல்லது வெளியேறினார் என்பதை பயனர்கள் பார்க்க முடியும் என்று கூகுள் கூறுகிறது.


“நீங்கள் நண்பர்கள் குழுவுடன் ஒரு கச்சேரிக்குச் செல்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் ஏற்கனவே உங்களுடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிரத் தேர்வுசெய்திருந்தால், கச்சேரி நடைபெறும் இடத்தின் முகவரிக்கு நீங்கள் அறிவிப்பை அமைக்கலாம், இதன் மூலம் அவர்கள் எப்போது வந்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அவர்கள் எப்போது அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதைப் பார்ப்பதற்கான அறிவிப்பையும் நீங்கள் அமைக்கலாம், இதனால், நெரிசலான இடங்களில் கூடுபவர்கள், தொலைந்தாலோ அல்லது பிரிந்துவிட்டாலோ கண்டுபிடிப்பது சுலபமாகும்” என்று கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் விளக்கியது.


இந்த அம்சத்தில் தனியுரிமை பறிபோகும் என்ற விஷயமும் இருப்பதால், இது குறித்த விளக்கத்தையும் கூகுள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு நபருடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிரத் தேர்வுசெய்த ஒருவருக்கு மட்டுமே அறிவிப்புகளை அமைக்க முடியும்.


பயனருடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்தவர், அவர்களுக்குத் தெரியப்படுத்த பல நினைவூட்டல்களைப் பெறுவார். Maps பயன்பாட்டில் புஷ் அறிவிப்பு மற்றும் மின்னஞ்சல், தொடர் மாதாந்திர மின்னஞ்சல்கள் உட்பட நினைவூட்டல்கள் வரும் என்பதால் தனியுரிமை பறிபோகும் என்ற கவலை இருக்காது. கூகுள் மேப்ஸின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு உலகளவில் இந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR