NO Recruitment: கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை

NO Recruitment in Google for 2022: கூகுள் நிறுவனம் ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துவிட்டதாக ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2022, 10:06 PM IST
  • கூகுள் நிறுவனம் ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துவிட்டதாக ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார் கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை
NO Recruitment: கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை title=

Be More Entreprenerial: இந்த ஆண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை கூகுள் நிறுவனம் குறைத்துவிட்டது என்று ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன  ஊழியர்களுக்கு கோடிட்டு காட்டினார்.  

அதிக கவனத்தும் பணிபுரிய வேண்டுமென்றும், கடினமான நாட்களில் காட்டியதை விட துரிதமாகவும், கூர்மையான கவனத்துடன், புத்திசாலித்தனத்துடன்செயல்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதன் ஊழியர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்த ஆண்டுக்கான பணியமர்த்தலின் வேகத்தை குறைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 10வது பாஸ் ஆனவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா மந்தநிலையால் பாதிக்கப்படும் என்று பல ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவரிடம் இருந்து கருத்துக்கள் வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வேலைக்கு ஆட்கள் எடுப்பதை கூகுள் முழுமையாக முடக்கவில்லை என்றும் தெரிகிறது.  பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியமான வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்.

ஆனால் ஆட்சேர்ப்பு என்பது தேவையானவற்றுக்காகவே இருக்கும் என்றும், அதிக முன்னுரிமைப் பகுதிகளுக்கு வளங்களை மீண்டும் வழங்குதல் என்பதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் இயங்கும் என்று சுந்தர் பிச்சை மேலும் கூறினார்.

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

"2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், நாங்கள் எங்கள் பணியமர்த்தலை பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களில் கவனம் செலுத்துவோம், மேலும் நாங்கள் பணியமர்த்தும் சிறந்த திறமைகள் எங்கள் நீண்ட கால முன்னுரிமைகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வோம்" என்று அவர், தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.  

இந்த காலகட்டத்தில் நிறுவனம் அதிக முன்னுரிமை உள்ள பகுதிகளுக்கு வளங்களை மறுபகிர்வு செய்யும் என்றும் தற்போதைய திட்டங்களை இடைநிறுத்துவதாகவும் பிச்சை தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தை மேலும் திறம்பட உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறிய சுந்தர் பிச்சை, நீங்கள் அனைவரும் ஈடுபடவும், நிறுவனத்திற்கு உதவ யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் பல வழிகளை உருவாக்குவோம், எனவே காத்திருங்கள்" என்று கூறினார்.

மேலும் படிக்க: Job Alert: இந்தியன் வங்கியில் பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும்

கூகுள் நிறுவனம் மட்டுமல்ல, பல்வேறு பெரிய நிறுவனங்களும் புதிதாக ஆட்களை பணியமர்த்துவதை இடைநிறுத்தியுள்ளன. மெட்டா நிறுவனம், இது கடினமான நேரம் என்றும், ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

செலவுகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று Uber கூறியுள்ளது.

பணியமர்த்தலை மெதுவாக்கும் திட்டங்களை Spotify அறிவித்தது, Twitter மற்றும் Netflix போன்ற பிற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக சமீபத்தில் முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News