BARC Employment 2022: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இவை. விண்ணப்பக் கட்டணம், என்ன வேலை, எங்கு பணியிடம் என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். நம் நாட்டில், அரசு வேலைகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அரசு வேலை கிடைக்க மாணவர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். அரசுப் பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் காலியிடங்கள் வெளியிடப்பட்டவுடன் விரைவாக நிரப்பப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அரசு வேலையில் சேர அதிகம் படிக்காத இளைஞர்களும் விரும்புகின்றனர்.
அதிகம் படிக்காதவர்களுக்கான அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வாய்ப்புகள் என்றுமே இருக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு பணி தொடர்பான வேலைவாய்ப்பு செய்தி இது.
மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஸ்டெனோகிராபர் உட்பட பல பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புகிறது. இந்தப் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கிவிட்டது, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. Stenographer (Grade III), Driver (Ordinary Grade), Work Assistant-A பணிகளுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 89 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ் மொத்தம் 89 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இங்கு 72 பணி உதவியாளர் பணியிடங்களும், 11 ஓட்டுனர் பணியிடங்களும், 6 ஸ்டெனோகிராபர் கிரேடு III பணியிடங்களும் அடங்கும்.
மேலும் படிக்க: Job Alert: இந்தியன் வங்கியில் பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும்
ஸ்டெனோகிராஃபர் பணிக்கு மாதம் 25500 ரூபாய் சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டிரைவர் பணியிடங்களுக்கு 19900 ரூபாயும், பணி உதவியாளர் பணிக்கு 18000 ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான recruit.barc.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR