இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன், சைபர் குற்றங்களும், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. நமக்கு எந்த வகையிலும் இழப்பு ஏற்படாமல் இருக்க, சில பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்வது அவசியமானதாகிறது. ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய பொருளாக ஆகிவிட்ட நிலையில், அதில் நம் பல்வேறு தரவுகளை சேமித்து வைக்கிறோம். முக்கியமான ஆவணங்கள் முதல், தனிப்பட்ட புகைப்படங்கள், வங்கிகளின் பாஸ்வேர்டு என, நமது அத்தனை தகவல்களையும் கொண்ட ஒரு கருவியாக ஸ்மார்ட்போன் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நமது ஸ்மார்ட்போன் பிறர் கையில் சிக்கினால், நமது தரவுகள் திருடப்பட்டு, பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். அல்லது நமது முக்கிய ஆவணங்கள் பிறர் கையில் சிக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க, நமது ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் அக்கவுண்ட் தரவுகளை பாதுக்காக செட்டிங்குகளில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


உங்கள் போனில் உள்ள செட்டிங் ஆப்ஷனுக்கு சென்று, கூகுள் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். அதில் All Services என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். Autofill ஆப்ஷனுக்கு சென்று Autofill With Google என்பதை தேர்வு செய்யவும். அதில் Preferences அப்ஷனை தேர்வு செய்யவும்.  அதில் Authenticate with biometrics before filling in passwords என்பதை தேர்வு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை, உங்களுக்கு தெரியாமல் யாராலும் திறக்க முடியாது.


மேலும் படிக்க | ஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!


பெரும்பாலானோரின் மற்றொரு பிரச்சனை ஃபோன் எல்லாவற்றையும் ஒட்டுக் கேட்கிறது என்பது தான் கேட்கிறது. இது தவிர, பெரும்பாலான பயனர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சிக்கல் என்னவென்றால், கூகிள் அவர்களின் பேச்சைக் கேட்பதுடன், Google பரிந்துரைகளில் நீங்கள் அது குறித்த விளம்பரங்களைக் காணலாம்.


இதனை தவிர்க்க முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து கூகுள் ஆப்ஷனுக்கு செல்லவும். இங்கே Google இன் செட்டிங்கஸை கிளிக் செய்யவும்.


உங்கள் Google சுயவிவரம் இங்கே காண்பிக்கப்படும், உங்கள் Google கணக்கை நிர்வகிப்பதற்கான Manage Your Google Account  விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, Data & Privacy  பகுதிக்குச் செல்லவும்.இங்கே Web & App Activity  என்ற விருப்பம் காட்டப்படும், அதைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்குச் செல்லவும். துணை அமைப்புகள் விருப்பத்தில் Audio and Video activity சேர்ப்பதற்கான விருப்பத்தை இங்கே காண்பீர்கள். அதில் டிக் செய்யப்பட்டிருந்தால் அதை நீக்கவும். Google's Terms of Service விதிமுறையை ஏற்கவும்.


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் இவ்வளவு ஸ்மார்ட்டாய் இருக்குமா? அதிர வைக்கும் Galaxy Z Fold6 சாம்சங் ஃபோன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ