உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கடந்த சில மாதங்களாக ஜெமினி-இயங்கும் AI சாட்போட்டில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. மேலும் லேட்டஸ்ட் அப்டேட்டில் படத்தை உருவாக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இந்த சூழலில், கூகுள் நிறுவனம், 'பார்ட்' என அழைக்கப்படும் AI-இயங்கும் சாட்போட்டை எதிர்காலத்தில் 'ஜெமினி' என மறுபெயரிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை ஆண்ட்ராய்டு ஆப் டெவலப்பர் டிலான் ரூசல் தன்னுடைய X பக்கத்தில் பதிவில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 7, 2024 தேதியிட்ட சேஞ்ச்லாக்கில் லீக்கான புகைப்படம், பெயர் மாற்றத்தைக் குறிப்பது மட்டுமல்லாமல், வரவிருக்கும் அம்சங்களைப் பற்றிய தகவலையும் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காதலர் தினத்தில் லவ்வருக்கு கிப்ட் கொடுக்கணுமா...? அதிரடி தள்ளுபடியில் இந்த மொபைல்கள்


இதில் என்ன கவனிக்க வேண்டிய அம்சம் என்றால் ஜெமினி அல்ட்ரா மூலம் இயக்கப்படும் அடுத்த வெர்சன் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கிறது. இதுதான் கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் ஏஐ மொழி மாடல் வெர்சனின் அடுத்த பூதம் ஆகும். இது வரும்பட்சத்தில் தொழில்நுட்ப உலகில் அடுத்த மிகப்பெரிய புரட்சியும் ஏற்பட போகிறது. அத்துடன் chatGPT Plus மற்றும் Microsoft Copilot-ஐ இயக்கும் OpenAI இன் GPT-4 -க்கு கடும் போட்டியை கொடுக்கும். இவற்றை மார்க்கெட்டில் வீழ்த்தக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், ஜெமினியின் இந்த அட்வான்ஸ் பதிப்பை பெற வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 



ஆனால் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத நேரத்தில் அனைத்து பணிகளையும் செய்வது மட்டுமல்லாமல் சாத்தியப்படுத்தியும் காட்டும். பல்வேறு சிக்கலான பணிகளையும் கையாளும் திறன் இதில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெமினி அல்ட்ராவில் திறன்களை மேம்படுத்தவும், கோப்புகள், டேட்டா, ஆவணங்கள் ஆகியவற்றை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் திறனை இன்னும் மேம்படுத்தவும் கூகுள் திட்டமிட்டிருக்கிறது. மொபைலில் ஈஸியாக பயன்படுத்தும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும் Google AI ஜெமினி அல்ட்ரா மூலம் புதிய விஷயங்களை எளிதாக கற்றுக் கொள்ளலாம். நிகழ்வுகளை திட்டமிட, குறிப்புகளை எழுத, தொழில்நுட்ப உலகில் தேவையான உதவிகளை வழங்க என சகலத்துக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. 


அத்துடன் ஜிமெயில், மேப்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு கூகுள் சேவைகளுடன் ஜெமினி ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிகிறது. ஆண்ட்ராய்டு யூசர்கள் ஜெமினியை பயன்படுத்த ஒரு பிரத்யேக செயலியைக் கொண்டிருக்கும் போது, iOS பயனர்கள் ஜெமினியை அனுபவிக்க Google செயலியை பயன்படுத்த வேண்டியிருக்கும்.


கூகுளின் இந்த நடவடிக்கை தொழில்நுட்பத் துறையில் நடந்து வரும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. நிறுவனங்கள் யூசர்களின் அனுபவங்களை மேம்படுத்தவும் புதிய செயல்பாடுகளை வழங்கவும் அப்டேட்டான லேட்டஸ்ட் AI வெர்சன்கள் மற்றும் சாட்போட்களில் அதிக அளவில் முதலீடு செய்கின்றன. ஜெமினிக்கு வேறு பெயர் வைத்தல் மற்றும் அப்டேட் வெர்சன் ஆகியவை AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கவும், இந்த துறையில் மற்ற முக்கிய போட்டியாளர்களுடன் போட்டியிடவும் Google-க்கு உதவும். அத்துடன் பிரபலமான கூகிள் சேவைகளுடன் ஜெமினியின் ஒருங்கிணைப்பு என்பது AI-ஐ மிகவும் அணுகக்கூடியதாகவும் பயனர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பயனுள்ளதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பிளிப்கார்ட்டின் அசத்தல் திட்டம்! இனி ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ