உலகின் தொழில்நுட்ப ஜாம்பவனான கூகிளுக்கு ரூ .1,420 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூடியூபில் குழந்தைகளின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதால் இந்த அபராதம் கூகிளில் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களின்படி, விளம்பரத்திற்கான தரவுகளை சேகரிக்கும் போது யூடியூப் குழந்தைகள் தனியுரிமை சட்டத்தை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் (FTC) இந்த அபராதத்தை கூகிளுக்கு விதித்துள்ளது, இருப்பினும் இந்த விஷயம் தற்போது நீதித் துறை மேசையில் உள்ளது. அமெரிக்க நீதி துறை ஒப்புதல் பெற்ற பின்னர், கூகிளுக்கான அபராதம் உறுதி செய்யப்படும். இதன் பின்னர் கூகிள் நிறுவனம், ரூ. 1,420 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


கூகிள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, இதுவரை குழந்தைகள் தனியுரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும். ஆன்லைன் விளம்பரத்தில் சார்புடையதற்காக இந்த அபராதம் கூகிளில் விதிக்கப்பட்டுள்ளது.


ஊடக அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐரோப்பிய ஆணையம் கூகிளுக்கு 344 பில்லியன் ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது. இது கூகிளுக்கு மிகப்பெரிய அபராதம். உண்மையில், ஒவ்வொரு முறையும் கூகிள் தனது மொபைல் சாதன மூலோபாயத்தின் கீழ் கூகிள் தேடுபொறியை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது, இந்த குற்றச்சாட்டுகளை சமாளிப்பது கூகிள் நிறுவனத்திற்கு கடினமான ஒன்றாக உள்ளது.