உங்களை விடாமல் துரத்தும் கூகுளை எளிதாக சமாளிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
கூகுள் நம்மை தொடர்ந்து கண்காணிப்பதால் நமது தனியுரிமை பாதிக்கப்படலாம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த கூகுள் கணக்கு மற்றும் சாதன அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்யலாம்.
கூகுள் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க GPS அமைப்பை மட்டுமல்ல பல விதமான செயலிகளையும் பயன்படுத்துகிறது. பல ஸ்மார்ட்போன் பயனர்கள் பலருக்கு தங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களும், அதில் உள்ள பல்வேறு உள்ளமைக்கப்பட்ட செயலிகள் மூலம் இருப்பிடத் தரவைச் சேகரிக்கின்றன என்பது தெரியாது. வைஃபை நெட்வொர்க்குகள், செல் டவர்கள் மற்றும் புளூடூத் போன்ற பல தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்தி உங்கள் சரியான இருப்பிடத்தைக் கண்டறியும்.
கூகுள் நம்மை தொடர்ந்து கண்காணிப்பதால் நமது தனியுரிமை பாதிக்கப்படலாம். ஆனால் அதைக் கட்டுப்படுத்த கூகுள் கணக்கு (Google Account) மற்றும் சாதன அமைப்புகளில் (Phone Settings) சில மாற்றங்களைச் செய்யலாம். இதன் மூலம் கூகுள் உங்களை கண்காணிப்பதை தடுக்கலாம்.
கூகுள் இருப்பிடத்தை எவ்வாறு கண்காணிக்கிறது?
1. வைஃபை: உங்கள் சாதனம் இணைக்கப்பட்டுள்ள அல்லது கண்டறிந்த வைஃபை (Wifi) நெட்வொர்க்குகளிலிருந்து பெறும் சிக்னல் தரவை கூகுள் பயன்படுத்தி இருப்பிடத்தை கண்டறிகிறது. சிக்னல் வலிமையின் அடிப்படையில், இது உங்கள் சரியான இடத்தை மதிப்பிடுகிறது.
2. ஐபி முகவரி: உங்கள் சாதனம் இணையத்துடன் இணைக்கும் போது IP முகவரியைப் பெறுகிறது. இந்த முகவரி மூலம் உங்கள் புவியியல் இருப்பிடத்தை மதிப்பிடலாம்.
3. செல்போன் டவர்: உங்கள் ஃபோன் அருகிலுள்ள மொபைல் டவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்னல் வலிமையின் அடிப்படையில், உங்கள் பொதுவான இருப்பிடத்தை கூகுள் கண்டறிய முடியும்.
4. புளூடூத் சாதனம்: அருகிலுள்ள புளூடூத் சாதனங்கள் அல்லது கடைகளில் நிறுவப்பட்டுள்ள சிக்னல்களைப் பயன்படுத்தி கூகுள் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.
5. சென்சார் தரவு: முடுக்கமானி மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களின் தரவு உங்கள் இயக்கம் மற்றும் இருப்பிடத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.
6. பயனர் உள்ளீடு: உங்கள் இருப்பிடம் தொடர்பான தரவுகளை கூகுள் சேவைகள் தொடர்பான செயலிகளில் பகிர்ந்து கொள்ளும் நிலையில், இந்தத் தரவு அதிக துல்லியமாக உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை வழங்குகிறது.
கூகுள் கண்காணிப்பை தடுப்பது எப்படி?
1. ஆக்டிவிடி அமைப்புகளை நிர்வகிக்கவும்: உங்கள் Google கணக்கில் My Activity விருப்பத்திற்குச் சென்று Web & App Activity மற்றும் Location History ஆகியவற்றை முடக்கவும்.
2. தரவுகளை நீக்கவும்: My Google Activity ஆப்ஷனுக்கு சென்று, Delete activity by ஆப்ஷன் மூலம் உங்கள் இருப்பிடத் தரவை நீக்கவும்.
3. போனில் உள்ள செட்டிங்குகளை சரிசெய்யவும்:
உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டிங்குகளில் Location என்னும் இருப்பிட அம்சத்தை முடக்கவும். மேலும், Activity Control’s அம்சத்தையும் முடக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ