Apple, Googleக்கு சவால் விடும் `சுதேசி` மொபைல் ஆப் ஸ்டோர் விரைவில் அறிமுகம்
![Apple, Googleக்கு சவால் விடும் 'சுதேசி' மொபைல் ஆப் ஸ்டோர் விரைவில் அறிமுகம் Apple, Googleக்கு சவால் விடும் 'சுதேசி' மொபைல் ஆப் ஸ்டோர் விரைவில் அறிமுகம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/10/03/170903-google.jpg?itok=6XjzbASK)
உள்நாட்டு ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்ட பிறகு, ஆப்பிள் மற்றும் கூகுள் மீது உள்நாட்டு நிறுவனங்களின் சார்புத்தன்மை குறையும், அவர்களுக்கான புதிய தெரிவு கிடைக்கும்.
புதுடெல்லி: இந்தியா தனது சொந்த ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த உள்நாட்டு ஆப் ஸ்டோர் (mobile app store) தொடங்கப்பட்ட பிறகு, ஆப்பிள் மற்றும் கூகுள் மீதான சார்புத்தன்மை குறையும், அவர்களுக்கான புதிய தெரிவு கிடைக்கும்
நாட்டில் சுமார் 500 மில்லியன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இருப்பதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்திய நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை தொடர்ந்து மீறுவதாக கூகுள் புகார் கூறுகிறது. இதுபோன்ற நிலை எந்தவொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கும் (Startup) நல்லதல்ல.
அதிருப்தியை வெளிப்படுத்திய Paytm
கூகுளுக்கு அதிக கட்டணம் செலுத்தும் இந்திய நிறுவனமான பேடிஎம் (Paytm), கடந்த மாதம், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பேடிஎம் செயலியை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்ற முடிவெடுத்தது. அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தது. மறுபுறம், ஆல்பாபெட்டுக்கு (Alphabet) சொந்தமான கூகுள் இந்த வாரம் முதல் ஒரு கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது, அதன் கீழ் அதன் ஆண்ட்ராய்டு ஸ்டோரில் மொபைல் செயலிகளுக்கு செலுத்தப்படும் கட்டணங்களில் இருந்து 30% கமிஷன் எடுத்துக் கொள்ளும்.
ஏற்கனவே ஒரு ஆப் ஸ்டோர் உள்ளது
இதுவரை முறையான கோரிக்கை எதுவும் பெறப்படவில்லை, ஆனால் ஒரு மொபைல் ப்ளே ஸ்டோர் பரிசீலனையில் உள்ளது என்று இந்த விவகாரம் குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவில் ஏற்கனவே ஒரு மொபைல் ஆப் ஸ்டோர் உள்ளது, அதில் அரசாங்கத்தின் 1200 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் உள்ளன என்று அந்த அதிகாரி கூறுகிறார். இது தவிர, இப்போது Paytm கூறும் விஷயத்தையும் அரசு பரிசீலிக்கும்.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள டெவலப்பர்களில் சுமார் 3 சதவீதம் பேர், கடந்த 12 மாதங்களில் டிஜிட்டல் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக கூகுள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 97% டெவலப்பர்கள் பேடிஎம்மை பின்பற்றுகின்றனர்.
தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது
பல இந்திய தொடக்க நிறுவனங்கள் உள்ளூர் ஆப் ஸ்டோர் இருந்தால் நல்லது என்று நினைக்கின்றனர். பெங்களூரைச் சேர்ந்த கேமிங் நிறுவனமான என்எஸ்எஃப் கேம்ஸின் (nSF Games) இணை நிறுவனர் விஷால் கோண்டல் இவ்வாறு கூறுகிறார், 'நாங்கள் 30% கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்களை பிடித்தால், எங்கள் வியாபாரம் எப்படி நடக்கும்? எனவே இப்போது ஒரு உள்ளூர் ஆப் ஸ்டோருக்கான தேவை மிகவும் அவசியமாகியிருக்கிறது.'
'கூகுள், தானே நீதிபதி, நடுவர் மற்றும் தண்டனை நிறைபேற்றுபவர் என மாறிவிட்டது'
கூகுள், தானே நீதிபதி, நடுவர் மற்றும் தண்டனை நிறைபேற்றுபவர் என செயல்படுவதாக பேடிஎம் நிறுவனத்தின் நிறுவகர் விஜய் சர்மா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், கூகுளின் அனைத்து விதிமுறைகளுக்கும் Paytm உடன்படவில்லை. ஆனால் தனது செயலியை மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடுவதற்காக சில விஷயங்களை அகற்ற வேண்டியிருந்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR