ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் செயலிகளை கூகுள் பெருமளவில் குறைக்க திட்டமிட்டுள்ளது. மே 11 ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செய்யும் செயலிகள் செயல்படாது என தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், அண்மையில் கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக அந்த கொள்கையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள அழைப்புப் பதிவு செயலிகளை நீக்கும் அம்சமும் இடம்பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோவை கலங்கடிக்கும் BSNL திட்டங்கள்: எக்கச்சக்க நன்மைகள்


அதாவது, பில்ட்-இன் கால் ரெக்கார்டர் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள், மே 11க்குப் பிறகு அழைப்புகளைப் பதிவுசெய்ய முடியாது. இருப்பினும், Reddit யூசர்கள் என்எல்எல் ஆப்ஸ் மூலம் கூகுளின் புதிய விதிகளை ஆராய்ந்தபோது, மூன்றாவது தரப்பு செயலிகளை மட்டுமே புதிய மாற்றங்கள் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைலில் இயல்பாக இருக்கும் கால் ரெக்கார்டிங் அம்சம் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ள டெக் வல்லுநர்கள், வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனில் அழைப்பு பதிவு விருப்பம் இருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.



கூகுள் கொண்டுவந்துள்ள விதிமுறைகள் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும். பிரத்யேகமாக எந்த மொபைலுக்காகவும் இந்த புதிய விதியை கூகுள் அறிமுகப்படுத்தவில்லை. பிளேஸ்டோரில் இருக்கும் தேவையற்ற கால் ரெக்கார்டிங் செயலிகளை நீக்கும் வகையில் இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கால் ரெக்கார்டிங் செயலிகளின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதால், தகவல் பாதுகாப்பு உரிமையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. 



மேலும் படிக்க | இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் Galaxy M53 5G! விலை எவ்வளவு


கூகுள் நிறுவனம் மீது உலகளவில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால், இந்த விவகாரங்களில் தற்போது கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது. பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகள் மூலம் தனிநபர் தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், அவற்றில் சில செயலிகளை களையெடுக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது கூகுள். மே 11 ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR