புதுடெல்லி: இந்தியாவில் போக்குவரத்து முறைகளும் வகைகளும் மாறத் தொடங்கியுள்ளன. மின்சார வாகனங்கள் மிக வேகமாக டிரெண்டாகி வருகின்றன. மக்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார வாகனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகள் மற்றும் தொல்லைகள் இரண்டிலிருந்தும் விடுபடலாம். இது தவிர மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளன. நீங்கள் ஒரு மின்சார ஸ்கூட்டரைப் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. பல வித சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது இந்தியாவில் கிடைக்கின்றன. அதில் ஒன்றான டிவிஎஸ் iQube மின்சார ஸ்கூட்டர் பற்றி இந்த பதிவில் காணலாம். 


டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரை வாங்குவதற்கான செயல்முறை மிக எளிதானது. டெல்லியில் இதன் ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1 லட்சம் ஆகும். எனினும், வெறும் ரூ.3,255 செலுத்தி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு செல்லலாம். இதற்கான வழிமுறையை இந்த பதிவில் காணலாம். 


தவணையை 36 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்


இஎம்ஐ கால்குலேட்டரின் படி, ரூ.10,000 முன்பணம் செலுத்திய பிறகு, உங்களுக்கு ரூ.90,699 கடன் கிடைக்கும். இந்தத் தொகையில், 9.7 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாதங்களுக்கு தவணை செலுத்த வேண்டும், அதாவது ரூ.3,255 செலுத்த வேண்டும். 


மேலும் படிக்க | Honda கார்களில் மார்ச் மாத பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள் 


இந்த மின்சார ஸ்கூட்டர் 4.4 கிலோவாட் அல்லது 6 bhp மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 140 என்எம் உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. ஸ்போர்ட் மோடில் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ ஆகும். iCube இன் பேட்டரியை 5 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் இகோ மோடில் 75 கிமீ தூரம் செல்லும் என்றும், ஸ்போர்ட் முறையில் 55 கிமீ வரை இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.


புதிய தலைமுறை TVS SmartConnect இயங்குதளம்


டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் iQube உடன் புதிய தலைமுறை TVS SmartConnect இயங்குதளத்தையும் அளித்துள்ளது. இது புளூடூத் இணைப்பு, அதிநவீன TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பிரத்யேக TVS iQube செயலியுடன் வருகிறது. இதன் மூலம் ஜியோ-ஃபென்சிங், ரிமோட் பேட்டரி சார்ஜ் நிலை, வழிசெலுத்தல், கடைசியாக பார்க் செய்யப்பட்ட்ட இடம் பற்றிய தகவல், இன்கமிங் கால் ஆகிய அம்சங்களுடன் டெக்ஸ்ட் மெசேஜ் அலர்ட் ஆகிய அம்சங்களும் உள்ளன. 


பல புதிய அம்சங்களும் iQube உடன் வழங்கப்பட்டுள்ளன. இதில் Q-பார்க் உதவி, பகல் மற்றும் இரவு நேர டிஸ்பிளே, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் எல் இ டி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் ஆகியவை அடங்கும். டிவிஎஸ் ஐக்கியூப்-ஐ ஆன்லைனில் அல்லது குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | Maruti Suzuki சூப்பர் நியூஸ்: இனி இவற்றை ஆன்லைனிலேயே வாங்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR