புதுடெல்லி: நீங்கள் பைக்குகளின் ரசிகராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. இது போன்ற 4 புதிய பைக்குகள் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விரிவான தகவல்களை இங்கே காண்போம்.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350
2021 வருடத்தின் மிகவும் வலுவான பைக் Royal Enfield Classic 350 ஆகும். ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் பைக் 349 CC சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு DOHC என்ஜின் பெற்றுள்ளது. இது தவிர, இந்த இன்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கையும் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் அதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ 1.84 லட்சம், இது ரூ 2.51 லட்சம் வரை உயர்கிறது.
ALSO READ: Best Electric Cycle:GoZero Mobility-ன் அட்டகாச Skellig Lite மின்சார சைக்கிள் அறிமுகம்
டிவிஎஸ் ரைடர் 125
TVS Raider 125 பற்றி பேசுகையில், இது 124.8 சிசி ஒற்றை சிலிண்டர், ஏற் எண்டு ஆயில் கூல்ட் SI எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சினில் ஐந்து ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர் ஆகும். இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் 125 இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 98,234 ரூபாய்.
யமஹா R15M
Yamaha R15M, 155 சிசி, 4-ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு, 4 வால்வு, SOHC எஞ்சின் உள்ளது, இது 10000 rpm இல் அதிகபட்சமாக 18.4 PS பவரையும், 7500 rpm இல் 14.2 Nm பீக் டோர்க் பவரையும் உருவாக்குகிறது. இதில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கிடைக்கிறது. இந்திய சந்தையில் யமஹா R15M- ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .1,79,800.
யமஹா R15M V4
Yamaha R15 V4 இல் 155 சிசி, 4 வால்வு, 4-ஸ்ட்ரோக், IC SOHC எஞ்சின் உள்ளது. இதில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பெட்ரோல் டாங்க் நிறுவப்பட்டுள்ளது. பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இந்திய சந்தையில் ரூ .1,72,800 ஆகும்.
ALSO READ: Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR