காதல் ஜோடிகளுக்கு நல்ல சான்ஸ்... மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்... முந்துங்கள்!
Amazon Fab Phones Fest: காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வழங்கும் நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் மொபைல்களை இங்கு காணலாம்.
Amazon Fab Phones Fest: இளசுகள் முதல் பெருசுகள் வரை காதலர் தினம் வந்துவிட்டாலே குஷியாகிவிடுவார்கள். பள்ளி பருவத்தில் தொடங்கும் காதலுக்கு வயது வரம்பு என்று ஏதுமில்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இயக்குநர் ராம் சொன்னது போல், எல்லா காதலும் திருமணத்தில் முடிய வேண்டும் என்றில்லை, திருமணத்திற்கும் பின்னரும் காதல் தொடரும், காதல் வேறு திருமணம் வேறு. இவை அனைத்தும் உண்மைதான்.
காதல் ஒருவரை எங்கும் வேண்டுமானாலும் கொண்டு செல்லும். வெற்றியின் உச்சத்திற்கும் செல்லலாம், தோல்வியின் அடிமுடியையும் நீங்கள் காணலாம். காதல் ரங்கராட்டினம் போன்றது. பயம், மகிழ்ச்சி, குதூகலம், ஆர்பரிப்பு என அனைத்தையும் உங்கள் இணையுடன் பகிர்ந்துகொண்டு அந்த சுகமான பயணத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.
அமேசானின் அதிரடி மொபைல் விற்பனை
அந்த பயணத்தை சீராக வைத்திருப்பதுதான் இதுபோன்ற காதலர் தின கொண்டாட்டங்கள் எல்லாம். இந்த காலத்து இளசுகளை கேட்டால் எல்லா தினமும் காதலர் தினம்தானே என்பார்கள். அந்தளவிற்கு காதலை கொண்டாடக்கூடிய சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அத்தகைய காதலர் தினம் தற்போது நெருங்கிவிட்டது. இன்னும் மூன்று நாள்களே உள்ளது.
மேலும் படிக்க | காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!
காதலர் தினத்தில் இணையருக்கு ஞாபகார்த்தமாக ஏதாவது பரிசு கொடுப்பது காதலர்களின் வழக்கம், இரு தரப்பும் மாறி மாறி தங்களின் பரிசை கொடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில், ஒரு சிலர் தங்களின் இணையருக்கு ஸ்மார்ட்போனை பரிசாக அளிக்கலாம் என நினைத்துக்கொண்டிருப்பார்கள். அத்தகையோருக்கு அமேசான் ஒரு சிறப்பான தள்ளுபடி விற்பனையை நேற்று தொடங்கி உள்ளது எனலாம்.
முந்துங்கள் மக்களே...
Amazon Fab Phones Fest என்ற இந்த விற்பனையில் பல விலை அடுக்குகளில் மொபைல்கள் விற்பனையில் உள்ளன. இந்த Amazon Fab Phones Fest நேற்று தொடங்கிய நிலையில், வரும் பிப். 14ஆம் தேதி வரை மட்டுமே செயலில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
அந்த வகையில், ரூ.10 ஆயிரத்திற்குள் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்ட 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம். அவற்றின் சிறப்பம்சங்கள், விலை விவரம் போன்றவற்றை முழுமையாக காணலாம்.
Samsung Galaxy M14 5G
சாம்சங்கின் இந்த மொபைலின் விலை குறித்து தெரிந்துகொள்வதற்கு முன் அதன் சிறப்பம்சங்களை காணலாம். இந்த ஸ்மார்ட்போன் FHD+ தெளிவுத்திறனுடன் 6.6-இன்ச் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது.
கேமராவை பார்த்தால் இது 50MP டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பை கொண்டதாகும். இதில் 13MP செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு உதவும் செல்ஃபி கேமரா உள்ளது. Exynos 1330 சிப்செட் மூலம் இந்த மொபைல் இயக்கப்படுகிறது. இந்த மொபைலில் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், இதில் 6,000mAh பேட்டரி உள்ளது, இது Android 13 OS மூலம் இயங்குகிறது.
சாம்சங்கின் இந்த Galaxy M14 5G மொபைல் அமேசான் தளத்தில் 10 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது. கூடுதலாக, இறுதி விலையில் இருந்து 1,000 ரூபாய் வரை வங்கி தள்ளுபடி கிடைக்கிறது.
Itel P55 5G
இந்த மொபைல் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) 6.6-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 50MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைந்து Dimensity 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் Android 13 OS மூலம் இயங்குகிறது.
இந்த மொபைலின் விலை 10 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். கூப்பன் தள்ளுபடி 500 ரூபாய் உள்ளது. எனவேஸ அமேசானில் இதை 9 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் வாங்கலாம். குறிப்பாக, இந்த 10 ஆயிரம் ரூபாய் வகை ஸ்மார்ட்போன் பிரிவில் மிகவும் பிரபலமானது இந்த மாடல் ஆகும்.
Samsung Galaxy M04 4G
சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் FHD+ தெளிவுத்திறனுடன் 6.5-இன்ச் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 4 ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இது 13MP பிரதான லென்ஸ் மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸுடன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக 5MP முன் பக்க கேமரா உள்ளது. சாம்சங்கின் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் இப்போது அமேசானில் 6 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது, அதன் அசல் விலையான 8 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து அதன் தற்போதைய விலை குறைக்கப்பட்டதாகும்.
மேலும் படிக்க | 11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ