காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!

Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2024, 06:33 PM IST
  • அமேசானில் பல மொபைல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
  • Realme, Poco போன்ற பெரிய நிறுவனங்களின் மொபலும் இதில் உள்ளன.
  • ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவான மொபைலை இதில் காணலாம்.
காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!

Budget Smartphones For Valentines Day Gift: காதலர் தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. இப்போது தங்களின் ரொமான்டிக் தினத்திற்காக பல ஜோடிகளும் பல்வேறு திட்டங்களை யோசிக்க தொடங்கியிருப்பார்கள். தங்களின் காதலருக்கு என்ன பரிசளிக்கலாம் என்பது தொடங்கி அணு அணுவாக பல திட்டமிட்டிருப்பார்கள். குறிப்பாக, ரோஸ் டே, ஹக் டே, கிஸ் தொடங்கி தங்களின் கொண்டாடத்தையும் தொடங்கியிருப்பார்கள். 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், நீங்கள் உங்கள் காதலிக்கோ அல்லது காதலர் தினத்தில் பிரப்போஸ் செய்வோருக்கோ ஸ்மார்ட்போனை பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு பல நல்ல ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதுவும் குறைந்த பட்ஜெட்டில் குறிப்பாக, ரூ.8 ஆயிரத்திற்கும் கீழ் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு இப்போது ஜாக்பாட் சீசன்தான் என்று கூற வேண்டும். 

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் கிடைக்கிறது. குறிப்பாக, Realme, Poco, Techno போன்ற நிறுவனங்களின் மொபைல்களே இந்த விலையில் கிடைக்கின்றன. எனவே, அமேசானின் இந்த சலுகையை பயன்படுத்தி, உங்கள் காதலிக்கோ/காதலனுக்கோ, மனைவிக்கோ/கணவருக்கோ தயங்காமல் பரிசளிக்கலாம். 

மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த தவறுகளை சரி செய்யுங்கள்!

குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல்களையும், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இதில் காணலாம். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களில் உங்களுக்கோ அல்லது உங்களின் இணையருக்கோ ஏதுவான மாடலை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

Realme Narzo n53

Realme நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் விலை 7, 999 ரூபாய் முதல் தொடங்குகிறது. அமேசான் மூலம் வாங்கினால் 500 ரூபாய் தள்ளுபடி உள்ளது. மேலும், அமேசானில் 388 ரூபாய் மாதாந்திர தவணையில் வாங்கலாம்.   

இது ஒரே வேரியண்டில் வருகிறது. 128 ஜிபி வரை இன்டர்நெல் ஸ்டோரேஜ், 8GB வரை RAM ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 33W SUPERVOOC சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பேட்டரி உள்ளது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது.

Poco C51

Poco நிறுவனத்தின் C51 மொபைலின் விலை 5 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். அமேசானில் இருந்து நீங்கள் மாதத் தவணை மூலம் 267 ரூபாய் மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இந்த மாடல் ஸ்மார்ட்போனில் ஒரே வேரியண்டில் வருகிறது. அதாவது, 4ஜிபி RAM உடன் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது.  

இந்த மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும், 8MP AI கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடனும் இந்த மொபைல் வருகிறது. இந்த மொபைலில் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. ஸ்மார்ட்போன் MediaTek G36 octa-core பிராஸஸருடன் வருகிறது.

Tech POP 8 

Techno நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் விலை 6 ஆயிரத்து 499 ரூபாய். அமேசானில் 315 ரூபாய் மாதாந்திர தவணையிலும் நீங்கள் வாங்கலாம். இந்த மொபைல் ஒரே வேரியண்டில் வருகிறது. 4 ஜிபி RAM உடன் 64 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 

6.56 இன்ச் டாட்-இன் டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 90Hz ஆகும். இந்த மொபைல் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போன் Octa-Core T606 பிராஸஸருடன் வருகிறது. இந்த போன் 12MP டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது. 

மேலும் படிக்க | 5ஜி மொபைல் வாங்க நல்ல நேரம் மக்களே... அதிரடி விலை குறைப்பில் சாம்சங் ஸ்மார்ட்போன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News