பேச்சிலர் பசங்களுக்கு வரப்பிரசாதம்... கம்மி விலையில் ஜம்முனு வாஷிங் மெஷின் - நல்ல டீல் இதோ!
Washing Machine Under Rs 9 Thousand: குறைந்த விலையில், நல்ல புதிய லேட்டஸ்ட் வாஷிங் மெஷினை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தால், அமேசான் தளத்தில் கிடைக்கும் இந்த மூன்று மாடல்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Washing Machine Under Rs 9 Thousand In Amazon: ஒவ்வொருவரின் வீட்டிலும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஃபிரிட்ஜ், ஏசி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பொதுவானவையாக மாறிவிட்டன. நடுத்தர வர்க்கத்தினர் இதனை மாதத்தவணை, கிரெடிட் கார்டு ஷாப்பிங் என பல்வேறு வகைகளில் இதனை வாங்கிக்கொள்கின்றனர். மேலும், அனைவரும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பறந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில் இவை இல்லாமலும் காலம் தள்ள முடியாது.
இது குடும்பமாக வாழ்பவர்களின் வீட்டின் பிரச்னை மட்டுமில்லை, வேலைக்காக, படிப்புக்காக வெளியூரில் தங்கியிருக்கும் பல பேச்சிலர் பசங்களுக்கும்/பெண்களுக்கும் சேர்த்துதான். ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற வேலை சார்ந்த சாதனங்களும் அவர்களுக்கு தேவைப்படும் என்றாலும் ஏசி, மிக்ஸி, டிவி, கிரைண்டர் போன்றவை அவரவர் தேவைக்கு ஏற்பவே வாங்க நினைப்பார்கள். ஆனால், வாஷிங் மெஷின் ஒன்று பேச்சிலர்கள் வாங்கத் துடிக்கும் மிகப்பெரிய பொருளாகும்.
இருப்பினும், அதிக விலை உள்ளிட்ட காரணங்களால் பலரும் வாஷிங் மெஷினை வாங்க யோசிப்பார்களே ஒழிய அதன் தேவை மட்டும் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில், பல வகைகளில் இந்திய சந்தையில் கிடைக்கும் வாஷிங் மெஷின்களில் விலை குறைவான, ஆனால் நிறைவான மாடல்களை இங்கு காணலாம். LG உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனைத்து விலை வகைமைகளிலும் வாஷிங் மெஷினை வைத்துள்ளனர். இந்நிலையில், அமேசான் தளத்தில் 9 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷினை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | கார் வாங்க பணம் இல்லையா? இந்த வங்கி 100% கார் கடன் வழங்குகிறது!
Midea 7.5 KG (Semi-Automatic)
இந்த 7.5 கிலோ வாஷிங் மெஷின், ஒரு செமி ஆட்டோமேட்டிக் இயந்திரமாகும். இது ஒரு டாப் லோட் வாஷிங் மெஷின். இந்த வாஷிங் மெஷினில் 4-5 பேரின் துணிகளை எளிதாக துவைக்க முடியும். இது வெள்ளை-சிவப்பு நிறத்தில் வருகிறது.
அமேசானில் இந்த வாஷிங் மெஷினின் விலை 8 ஆயிரத்து 690 ரூபாய் ஆகும். இதற்கு 200 ரூபாய் கூப்பன் தள்ளுபடி உண்டு. இந்த இயந்திரத்தை மாதத் தவணையில் 421 ரூபாய்க்கும் வாங்கலாம். இதன் அளவு 42.5D x 74.5W x 96.5H ஆகும். இந்த வாஷிங் மெஷின் IPX4 மதிப்பீட்டில் வருகிறது.
Voltas Beko 7 Kg Semi-Automatic
இந்த ஏழு கிலோ வாஷிங் மெஷின் டாப் லோடிங் ஆகும். இந்த வாஷிங் மெஷினின் அளவு 1.21D x 2.04W x 2.39H ஆகும். இந்த மெஷின்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய இயந்திரத்தையும் விற்கலாம்.
தண்ணீர் வர இரண்டு வழி, ஸ்க்ரப்பர், ஸ்பெஷல் பல்சேட்டர், கேசட் ஃபில்டர் போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாக பார்க்கப்படுகிறது. . இந்த இயந்திரம் 1350 RPM-இல் வேகமாக இயங்கும். இந்த வாஷிங் மெஷின் அமேசானில் 8 ஆயிர்தது 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 436 ரூபாய் மாதாந்திர தவணையிலும் நீங்கள் இதனை வாங்கலாம்.
Power Guard 6.5 KG (Semi-Automatic)
இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் 3 முதல் நான்கு பேரின் துணிகளை துவைக்கலாம். இதன் அளவு 8D x 48W x 87H என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை-சிவப்பு வண்ண கலவையில் வருகிறது.
இந்த வாஷிங் மெஷின் அமேசானில் 6 ஆயிரத்து 590 ரூபாய்க்கு கிடைக்கிறது. 320 ரூபாய் மாதாந்திர தவணையிலும் இதனை நீங்கள் வாங்கலாம். இந்த வாஷிங் மெஷினுக்கு இரண்டு வருட உத்தரவாதத்தை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த வாஷிங் மெஷினில் சக்திவாய்ந்த 360W மோட்டார் உள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை... Swiggy மூலம் உணவு டெலிவரி - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ