மகிந்திராவின் XUV700 ஒரு மிகச்சிறந்த SUV ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல், தோற்றத்தில் அபாரமாகவும், பல வித திறன்கள் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இதன் பல அம்சங்கள் வேறு எந்த வாகனங்களிலும் இல்லாத புதுமையான அம்சங்களாகவும் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேண்ட்ஸ் ஃப்ரீ கட்டளை இணைப்பிற்காக Alexa Voice AI-ஐ பயன்படுத்தும் இந்தியாவின் முதல் எஸ்யூவி XUV700 என்று மஹிந்திரா வியாழக்கிழமை அறிவித்தது. உள்ளமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுடன், மஹிந்திரா XUV700 இன் ஓட்டுநர், ஜன்னல்கள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை நிர்வகிக்கவும், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், பாடல்களை மாற்றவும், போக்குவரத்தை கண்காணிக்கவும் வீட்டில் இணைக்கப்பட்ட கேஜெட்களைக் கட்டுப்படுத்தவும் குரல் கட்டளைகளைப் (voice command) பயன்படுத்தலாம்.


இந்த வசதியால் போதுமான வசதி கிடைப்பதோடு, ஒரு பாதுகாப்பான பயணத்தையும் இது அளிக்கின்றது.


ALSO READ:மகிந்திராவின் Mahindra XUV 700 விரைவில் அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ


இணைய இணைப்பு மிகவும் குறைவாக இருக்கும் இடங்களிலும், முற்றிலும் இல்லாத இடங்களிலும், மஹிந்திரா XUV700 (Mahindra XUV700) அலெக்சாவுக்கு ஆஃப்லைன் அணுகலை வழங்கும். நீங்கள் வீடு திரும்பும் வரை, காரின் செயல்பாடுகளை இயக்க அமேசானின் எக்கோ சாதனங்களைப் பயன்படுத்தலாம்.


எம் & எம் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ரா கூறுகையில், இந்த தடையற்ற ஒருங்கிணைப்பு உரிமை அனுபவத்தை மேலும் மேம்படுத்த உறுதியாக உள்ளோம் என்றார்.


மகிந்திராவின் (Mahindra) இந்த புதிய வாகனம் குறித்த எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. XUV700, நிறுவனத்தின் புதிய லோகோவைப் பயன்படுத்தும் மஹிந்திராவின் முதல் SUV ஆக இருக்கும்.


இந்த வாகனத்தில் கண்ணைக் கவரும் வகையில் பல வெளிப்புற அம்சங்கள் மற்றும் உட்புற வசதிக்கான அம்சங்களும் உள்ளன.


டிஆர்எல் மற்றும் ஆட்டோபூஸ்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஹெட்லைட்கள், ஸ்மார்ட் ஹேண்டில்கள், மிகப்பெரிய இன்-செக்மென்ட் சன்ரூஃப், தூய்மையான கேபின் காற்றுக்கான ஸ்மார்ட் ஃபில்டர் தொழில்நுட்பம் மற்றும் அட்ரினாக்ஸ் எனப்படும் புதிய கார் இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவை இதில் உள்ள சில சுவாரசியமான அம்சங்கள்.


ALSO READ: ரூ. 3.06 லட்சம் வரை சலுகை, மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR