புது டெல்லி: கிட்டத்தட்ட அரை மில்லியன் இந்தியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் ஒரு அண்டர்கிரௌண்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன, இது நிதி மோசடிக்கான பிரபலமான ஆதாரமாகும். குறைந்தது கடந்த 12 மாதங்களில் விவரங்கள் கசிவு மிகவும் தீவிரமானது என்று சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோக்கரின் ஸ்டாஷில் (Joker’s Stash) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தரவு, காலாவதி தேதிகள், சி.வி.வி / சி.வி.சி குறியீடுகள், அட்டைதாரர்களின் பெயர்கள் மற்றும் சில தரவுகளில் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற விவரங்களை உள்ளடக்கியது. இந்த விவரங்களை வைத்து ஆன்லைனில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, இதில் ஒன்றை பயன்படுத்தப்படலாம்.


கடந்த பல மாதங்களில் குரூப்-ஐபி (Group-IB) அச்சுறுத்தல் புலனாய்வு குழுவால் கண்டறியப்பட்ட இந்திய வங்கிகள் தொடர்பான இரண்டாவது மிகப்பெரிய அட்டைகளின் விவரங்களின் திருட்டு இதுவாகும்.


461,976 கார்டுகளின் விவரங்கள் ஒவ்வொன்றும் டாலர் 9 -க்கு விற்கப்பட்டு, தரவு கசிவின் மொத்த மதிப்பு டாலர் 4.2 மில்லியனாக (சுமார் ரூ.42 லட்சம்) இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் 2018-19 ஆண்டு அறிக்கையின்படி, அட்டைகள் மற்றும் இணைய வங்கி மூலம் 1,866 மோசடிகள் நிகழ்ந்தன. ஒரு மோசடிக்கு சராசரியாக ரூ .20 லட்சம் திருடப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற தகவல்கள் இருண்ட வலையில் (Dark Web) விற்பனை செய்யப்படுவதாக இந்திய இணைய பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து இந்திய வங்கிகளையும் எச்சரித்துள்ளனர்.