பிரிட்டிஷ் சொகுசு ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான Rolls-Royce, உலகின் அதிவேக அனைத்து மின்சார விமானத்தின் (All Electric Plane) சோதனையை முடித்துள்ளது. Rolls-Royce-ன் கூற்றுப்படி, 'அயன் பேர்ட்' எனப்படும் விமானத்தின் மையப்பகுதியின் முழு அளவிலான பிரதி மீது அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவனம் பரிசோதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானத்தின் மையத்தில் 500 ஹார்ஸ்பவர் கொண்ட மின்சார பவர் ட்ரெய்ன் உள்ளது. இது உலகத்தில் இதுவரை இல்லாத வேக சாதனைகளை நிகழ்த்தும் திறன் கொண்டது. சோதனைக்கு பயன்படுத்தப்பட பேட்டரி 250 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு போதுமான அளவைக் கொண்டது. இந்த விமானம், ACCEL எனப்படும் Rolls-Royce-ன் முயற்சியின் ஒரு பகுதியாகும்.


ACCEL திட்டக் குழுவில், மின்சார மோட்டார் மற்றும் கட்டுப்பாட்டு உற்பத்தியாளரான YASA மற்றும் விமானத் துறை ஸ்டார்ட் அப்-பான எலக்ட்ரோஃப்லைட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என Rolls-Royce நிறுவனம் கூறியுள்ளது.


ALSO READ: அசத்தலான 64MP கேமிராவுடன் வருகிறது Realme 7i ... அதுவும் அதிரடி விலையில்...!!!


குறிப்பிடத்தக்க வகையில், Rolls-Royce இந்த முழு மின்சார விமானத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு வழங்கிய தனி மனித இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களையும் நிறுவனம் பின்பற்றுகிறது. Rolls-Royce தனது 'ஸ்பிரிட் ஆஃப் இனவேஷன்’ விமானத்தில் இந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கும் என்று அறிவித்துள்ளது.


Rolls-Royce எலக்ட்ரிக்கல் இயக்குனர் ராப் வாட்சன் கூறுகையில், "Rolls-Royce 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பனை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பதில் உறுதியாக உள்ளது. ACCEL திட்டத்திற்கான தரை சோதனை முடிக்கப்படுவது அணிக்கு ஒரு பெரிய சாதனையாகும். இது உலக சாதனை முயற்சியை நோக்கிய மற்றொரு முக்கியமான படியாகும். இந்த திட்டம் Rolls-Royce-ன் திறன்களை வளர்ப்பதற்கும், எங்கள் நிலைத்தன்மை செயலுத்தியின் முக்கிய அங்கமான விமானத்தின் மின்மயமாக்கலை வழங்குவதில் நாங்கள் ஒரு தலைவராக இருப்பதை உறுதி செய்வதற்கும் உதவுகிறது." என்று கூறினார்.


Rolls-Royce உருவாக்கிய உலகின் அதிவேக ஆல்-எலக்ட்ரிக் விமானத்தின் சோதனை-விமான ஓட்டம் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இது கார்பன் பயன்பாடு இல்லாமல் முழு ஓட்டத்தையும் நிகழ்த்துவதற்கான நிறுவனத்தின் முதல் திட்டமாகும். உலக வெப்பமயமாக்கலை (Global Warming) பொறுத்த வரை இது மிக முக்கிய முன்முயற்சியாகக் கருதப்படுகிறது.


ALSO READ: iPhone 12 Mini, iPhone 12 Max: எத்தனை inch? எப்போது launch? விவரம் உள்ளே......


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR