Free Electric Scooters in india: ஹீரோ எலக்ட்ரிக் நாட்டின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாகும். நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில், ஹீரோ எலக்ட்ரிக் நாட்டின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் டூவீலர் நிறுவனமாக இருந்தது. இது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது. தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அதிரடியாக எலக்டிரிக் ஸ்கூட்டர் இலவசம் எனத் தெரிவித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகளையும் ஹீரோ நிறுவனம் விதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீரோ நிறுவனத்தின் புதிய கிளை கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மாநிலத்தின் பிரபலமான பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவில் நிறுவனத்தின் 100வது வாடிக்கையாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகை முழுவதும் இந்த சலுகை தொடரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ-ஸ்கூட்டருக்கு முழு ஐந்தாண்டு உத்தரவாதத்தைப் பெறுவார்கள். இதில் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் அடங்கும்.


அதிகம் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்


ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹீரோ எலக்ட்ரிக் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனம் கடந்த மாதம் 10,476 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஜூலை 2022-ல் ஹீரோ எலக்ட்ரிக் மிகப்பெரிய விற்பனையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாகவும் இருந்தது. மறுபுறம், ஒகினாவா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஏதர் எலக்ட்ரிக் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஏதர் எலக்ட்ரிக் நிறுவனம் 297 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹீரோ நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் ஆப்டிமா சிஎக்ஸ், எலக்ட்ரிக் என்ஒய்எக்ஸ் எச்எஸ்500, எலக்ட்ரிக் ஃபோட்டான் எல்பி மற்றும் ஹீரோ எடி போன்ற மாடல்களை விற்பனை செய்கிறது.


மேலும் படிக்க | பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்! மின்சாரம் தயாரிப்பது எளிதாகிவிட்டது


மேலும் படிக்க | வெறும் 15 ஆயிரத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் வாங்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata