பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்! மின்சாரம் தயாரிப்பது எளிதாகிவிட்டது

Fist Size Generator: பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் மிகவும் சிறிய ஜெனரேட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தயாரிக்கலாம், சார்ஜ் செய்யலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2022, 09:20 PM IST
  • பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்
  • மின்சாரம் தயாரிக்கலாம், சார்ஜ் செய்யலாம்...
  • அமேசானில் கிடைக்கும் பாக்கெட் ஜெனரேட்டார்
பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்! மின்சாரம் தயாரிப்பது எளிதாகிவிட்டது title=

புதுடெல்லி: உங்கள் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டும் என்னும்போது, பவர் பேக் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதைத் தவிர, மின்சாரத்தையே தாயரிக்கும் ஜெனரேட்டர் ஒன்று எப்போதும் உங்களுடன் இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் அது பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவு சிறியதாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இப்போது கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் பாக்கெட்டில் பொருந்தக்கூடிய ஒரு உறுதியான ஜெனரேட்டர் வந்துவிட்டது. 

பாக்கெட் ஜெனரேட்டர்: மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மினி ஜெனரேட்டர் உருவாக்கும் மின்சாரத்தில் இருந்து பவர் பேங்குகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம், கைக்குள் அடங்கிவிடும் அளவில் உள்ள  ஜெனரேட்டர் இது.

மேலும் படிக்க | கோவையில் கல்லூரி ஊழியர்களின் வெறித்தனமான தாக்குதல் வீடியோ வைரல்

அடிக்கடி சுற்றுலா சென்றாலோ அல்லது நண்பர்களுடன் வெளியூர் சென்றாலோ, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மற்ற பாக்கெட் சைஸ் சாதனங்களின் பேட்டரி எப்போது வேண்டுமானாலும் தீர்ந்துவிடும். அத்தகைய சூழ்நிலையில், சரியான நேரத்தில் மின்சாரம் வேண்டும் என்ற சூழல் ஏற்படும்.

இல்லாவிட்டால் யாரையும் தொடர்பு கொள்வதே கஷ்டமாகிவிடும். ஸ்மார்ட்போன் ஆஃப் ஆகிவிட்டால் அவ்வளவுதான்... அத்தகைய சூழ்நிலை மிகவும் ஆபத்தானது. இது போன்ற நிலை உங்களுக்கு ஏற்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், ஒரு பாக்கெட் அளவு ஜெனரேட்டரை வாங்கி கைக்கு அடக்கமாக வைத்து பயன்படுத்தலாம்.

இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பிற சாதனங்களை நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இதில் சிறப்பு என்னவென்றால், இதில் பேட்டரி இல்லை.  

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்

பாக்கெட் அளவு ஜெனரேட்டர் 

World Care Usb Hand Power Dynamo Torch Hand Crank Usb என்ற மினி ஜெனரேட்டரின் விலை ₹ 4239 மட்டுமே, மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் இந்த ஜெனரேட்டர் அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். 54 சதவிகிதம் அதிரடி தள்ளுபடிக்கு பிறகு  ₹ 1969  என்ற மிகவும் குறைந்த விலைக்கு இது கிடைக்கிறது.

மிகவும் குறைவான எடை கொண்ட இந்த இலகுரக ஜெனரேட்டரின் பொறிமுறையும் மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு லீவரைத் திருகி, ஸ்மார்ட்போன் அல்லது பிற சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டியது தான்.

வழக்கமான பவர் பேங்கைப் போலவே செயல்படும்போது ஸ்மார்ட்போன் உட்பட பிற சாதனங்களை சார்ஜ் செய்யலாம். இது மிகவும் வலுவான சாதனம், அமேசானில் இந்த மினி பாக்கெட் ஜெனரேட்டர் கிடைக்கிறது.  

மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News