HMD 105: நோக்கியாவின் HMD 105 போன் ஐபோன், ஸ்மார்ட்போன் என்ற விலையுயர்ந்த வட்டத்திற்கு வெகுதொலைவில் இருக்கும் சாதாரண போன். பலருக்கு இன்றும் ஆயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சாதாரண போனைப் பற்றி தெரிவதில்லை. உங்கள் அடிப்படை வேலைகளை முடிக்க மட்டும் போன் தேவைப்படுபவர்களுக்கு உகந்த போன் இது. இந்த போனின் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தெரிந்துக் கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

HMD 105 மொபைல்


எச்எம்டி 105 போனில், 1000mAh பேட்டரி, UPI சேவை, 23 மொழிகளின் ஆதரவு என இன்றைய அடிப்படை மொபைல் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் உள்ளன. ஃபீச்சர் போன்கள் எவ்வளவு பழையதாக இருந்தாலும், அவற்றின் அழகு எப்பொழுதும் அப்படியே இருக்கும்,


நோக்கியா (HMD Global) சமீபத்தில் HMD 105 போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு ஃபீச்சர் போனாக இருந்தாலும், முழுமையான ஸ்மார்ட்போன் போன்ற உணர்வை தருகிறது. எளிமையான வடிவமைப்பில் உள்ள இந்த போனில், UPI பேமெண்ட் போன்ற பல முக்கிய அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.


நோக்கியா ஃபீச்சர் போன் 


ரூ.999 விலையில் கிடைக்கும் எச்.எம்.டி ஃபீச்சர் போனின் டிஸ்பிளே, டிசைன், பில்ட் தரம், மென்பொருள், செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ... 2ஜிபி டேட்டா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்


HMD 105 காட்சி


HMD 105 போனில், 1.77 இன்ச் QQVGA கலர் டிஸ்பிளே உள்ளது, போனின் திரையிலும் நல்ல தெளிவுத்திறன் உள்ளது, நமது தேவைக்கேற்ப அதை அமைக்கலாம். தொலைபேசியில் அழைப்பு, செய்தி அனுப்புதல், மெனு போன்ற பல அடிப்படைப் பணிகளைச் செய்யலாம். அதன் நிறங்கள் நன்றாக இருக்கும். ஆனால் நேரடி சூரிய ஒளியில் உரை அல்லது மெனுவைப் படிப்பது சிரமமாக இருக்கலாம். இருந்தாலும் போனின் பிரைட்நெஸ் முழுமையாக இருந்தால் பிரச்சனை இல்லை  


HMD 105 வடிவமைப்பு 


HMD 105 (2024) மிகவும் நேர்த்தியான மற்றும் கச்சிதமான ஃபோன் ஆகும், 115.5 மிமீ உயரம் , அகலம் 49.5 மிமீ மற்றும் ஆழம் 14 மிமீ. (HMD 105 Design and Build Quality) மிகவும் இலகுவான போனின் எடை 77.5 கிராம் மட்டுமே.


வண்ணங்கள்


நீலம், ஊதா மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் எச்.எம்.டி போனின் உறை பாலிகார்பனேட்டால் ஆனது, இது நானோ டெக்ஸ்ச்சர்டு பூச்சு கொண்டதாக இருப்பதால், அதன் பிடியும் நன்றாக இருக்கும். தொலைபேசி IP52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, டார்ச்சிற்கான இரட்டை ஃபிளாஷ் உள்ளது.


மேலும் படிக்க | கிருஷ்ணாஷ்டமிக்கு செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மூலம் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!


HMD 105 (2024) இணைப்பு
கீழே மைக்ரோ யுஎஸ்பி உள்ளது, இது சார்ஜிங் போர்ட் மற்றும் டேட்டாவை மாற்ற முடியும், பின்னர் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. நீங்கள் அதன் பின் அட்டையை அகற்றினால், 1,000mAh பேட்டரி இருக்கும். இரண்டு மினி சிம் கார்டுகள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை செருகலாம். இது உங்கள் மொபைலின் சேமிப்பகத்தை 32ஜிபி வரை அதிகரிக்கும்,  இசை, புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளைச் சேமிக்க இது உதவும்.


HMD 105 (2024) இன் மென்பொருள் & செயல்திறன்
RTOS இயங்குதளத்தில் இயங்கும் HMD 105 இல் UPI Payments போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம். அடிப்படை பணிகள் மிகவும் சுமூகமாக முடிவடையும், இரட்டை சிம் இருக்கும் இந்த போனில், MP3 பிளேயர் மற்றும் பொழுதுபோக்குக்காக FM ரேடியோ பொருத்தபப்ட்டுள்ளது.  


பேட்டரி ஆயுள்
HMD 105 (2024), 1,000mAh நீக்கக்கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது. செயல்திறனிலும் சிறந்த இந்த போன், 10 முதல் 12 நாட்களுக்குப் பிறகு சார்ஜ் செய்தால் போதுமானது. 999 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த போனை வாங்கினால் ஸ்மார்ட்போன் போன்ற அனுபவத்தை அனுபவிக்கலாம்.


மேலும் படிக்க | 2 ஜிபி டேட்டாவுடன் குறைவான விலையில் ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் 70 நாட்கள் பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ