கிருஷ்ணாஷ்டமிக்கு செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மூலம் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!

Meta AI : காதலர்களின் கண்கண்ட தெய்வமான கிருஷ்ணரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்... இது புகைப்படத்துடன் உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்த அற்புதமான வழி...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2024, 09:55 PM IST
  • காதலர்களின் கண்கண்ட தெய்வம் கிருஷ்ணரின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  • அன்புக்குரியவர்களை வாழ்த்த அற்புதமான வழி
  • கண்ணனின் பிறந்தநாள் ஏஐ புகைப்படங்கள்
கிருஷ்ணாஷ்டமிக்கு செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மூலம் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்! title=

கிருஷ்ணா ஜென்மாஷ்டமி 2024 கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டிவிட்டன. ஆவணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். இந்த நாள் நாடு முழுவதும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடுவது வழக்கம்.

ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்த  ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தநாளான இந்த நாளில், மதுராவின் பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி உலக முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு பண்டிகையும் டிஜிட்டல் வாழ்த்துகளுடன்தான் துவங்குகிறது. 

இப்போது கூகுளில் சென்று ஜன்மாஷ்டமி வாழ்த்துப் புகைப்படத்தைத் தேடி, அதை டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய காலம் இப்போது மலையேறிவிட்டது. Meta AI பயன்படுத்தத் தொடங்கியதும், வாழ்த்து சொல்வதும் மிகவும் சுலபமாகிவிட்டது.

Meta AI மூலம் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை நேரடியாக உருவாக்கலாம். கூகுளில் சென்று புகைப்படங்களை தனியாக தேட வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சாட்டிங்கிலேயே நவீனமயமான புகைப்படங்களை உருவாக்கலாம். ஜென்மாஷ்டமிக்கு வாழ்த்து தெரிவிக்க நீங்களே புகைப்படத்தை உருவாக்க விரும்பினால், Meta AI உங்களுக்கு உதவும். Meta AI இன் உதவியுடன் நீங்கள் பல்வேறு வகையான வாழ்த்துப் படங்களை உங்கள் விருப்பப்படி உருவாக்கி அனுப்பி மகிழலாம்.

மேலும் படிக்க | கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??

மெட்டா ஏஐ வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஜன்மாஷ்டமி வாழ்த்து படங்களை உருவாக்குவது எப்படி?

WhatsApp இல் Meta AI மூலம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2024 வாழ்த்துப் படங்களை உருவாக்க, முதலில் உங்கள் மொபைலில் WhatsApp செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். 

வாட்ஸ்-அப் செயலியில் உள்ள நீல நிற வட்டமான Meta AI ஐகானைக் கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் உருவாக்க விரும்பும் ஜென்மாஷ்டமி புகைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதை உரையாடலில் டைப் செய்யவும்.  எடுத்துக்காட்டாக, "இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகளின் படத்தை உருவாக்கவும்".

4. இந்த வழியில், நீங்கள் எந்த படத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ, அதே படத்தை உங்களுக்காக Meta AI உருவாக்கும்.

இது ஜென்மாஷ்டமி ஸ்பெஷல் மெட்ட ஏஐ புகைப்படங்களை உருவாக்க சிம்பிளான வழி... Meta AI புகைப்படத்தை உருவாக்கியவுடன், அதை எளிதாக மற்றொரு வாட்ஸ்-அப்புக்கு அனுப்பலாம். இந்த புகைப்படங்கள் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துகளை தெரிவித்து கிருஷ்ணரை வணங்குங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: பூஜை நேரம், முகூர்த்தம், முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News