ஃபேஸ் அன்லாக்` சிறப்பம்சம் கொண்ட ஹானர் 9 லைட்!!
முகத்தை காட்டினாலே ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் அன்லாக் ஆகும்.
சீன நிறுவனமான ஹூவாய் பிராண்ட் அதன் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் உள்ளது. கிரே நிறத்தில் கிடைக்கும் ஹானர் 9 லடை் ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துவங்கியது.
3 ஜிபி ரேம் கொண்ட ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையிலும், 4 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.14,999 விலையிலும் அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனில் முக்கிய அம்சம் "ஃபேஸ் அன்லாக்" ஆகும். இந்த "ஃபேஸ் அன்லாக்" காற்று வழியாக அதாவது, HOTA (ஹூவாய் ஓவர் தி ஏர் புதுப்பிப்பு) வழியாக செயல்படுகிறது என அந்நிறுவனம் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
இந்த "ஃபேஸ் அன்லாக்" HOTA டெக்னாலாஜி அடுத்த மாதம் முதல் வாடிகையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 5.65 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஃபுல் ஹெச்.டி. பிளஸ் கொண்டது. மேலும் இருபுறமும் டூயல் கேமராவை கொண்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த விலையில் பல்வேறு அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.