ஐபிஎல் 2022 மார்ச் 26 முதல் தொடங்கியது. நீங்களும் ஐபிஎல் ரசிகராக இருந்தால், இன்று நீங்கள் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் அனைத்து போட்டிகளையும் இலவசமாகப் பார்க்க முடியும். இந்த ஐபிஎல் சீசனில் ஹாட்ஸ்டாரின் ஒரு வருட சந்தாவை எப்படி இலவசமாகப் பெறுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படித்தான் ஒரு வருட ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்
ஹாட்ஸ்டார் சந்தாவை எப்படி இலவசமாகப் பெறுவது?, ரிலையன்ஸ் ஜியோவின் உதவியுடன் இதைச் செய்யலாம். ஜியோ சமீபத்தில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதை வாங்குவதன் மூலம் நீங்கள் ஐபிஎல் 2022 போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். இந்தத் திட்டங்களின் விலை மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ஆப்பிள் புதிய ஐபோன் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறதா?


ஜியோ ரூ 2,999 திட்டம்
ஜியோவின் இந்த திட்டம் ரூ. 2,999 மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி அதிவேக இணையம், எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறுகிறீர்கள். ஓடிடி அணுகலைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் ஒரு வருடத்திற்கான அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடம் ஆகும். 


ஜியோ ரூ 555 திட்டம்
55 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், 1ஜிபி அதிவேக தினசரி டேட்டாவைப் பெறுவீர்கள், உங்கள் தினசரி டேட்டா வரம்பை மீறினால், உங்கள் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் பலன்களையும் பெற முடியாது. ரூ. 555 விலையில், இந்த திட்டம் அனைத்து ஜியோ ஆப்ஸ் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட மொபைல் சந்தாவுடன் வருகிறது.


சிறப்பு ஐபிஎல் 2022க்காக ஜியோ அறிமுகப்படுத்திய இரண்டு திட்டங்கள் இவை. கடந்த 28 நாட்களாக எந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்திலும் செயலில் உள்ள ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்களால் இந்தத் திட்டங்களைப் பெற முடியும்.


மேலும் படிக்க | தோனியின் இந்த செயலால் வருத்தமான ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR