ஐபிஎல் 2022 போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. மொத்தம் 65 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டிகள், மே 29ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. கொரோனா சூழல் காரணமாக மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, தோனி ஆரஞ்சு நிற கையுறைகளை அணிந்திருக்கும் புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அறிமுகமான போது நீண்ட தலைமுடியுடன் அவர் இருக்கும் படங்களும் சேர்ந்து வைரல் ஆகி வருகிறது.
In #IPL2022 you will find @msdhoni wicket keeping with the 'ORANGE SS GLOVES' with which he had started his career #WhistlePodu @ChennaiIPL #MSDhoni pic.twitter.com/sMwz5sYArN
— DHONI Trends (@TrendsDhoni) March 25, 2022
மேலும் படிக்க | 14 கோடிக்கு ஏலம் எடுத்தாலும், வீரருக்கு செல்லும் பணம் இவ்ளோதானா?
தோனிக்கு இந்த ஐபிஎல் ஒரு முக்கியமான போட்டி ஆகும். அவர் ஏற்கனவே 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், இன்னும் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு பகுதியாக உள்ளார். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார், அது அவருக்கும் நன்கு தெரியும். மேலும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அணியின் கேப்டன் பதவியில் இருந்து விளக்கியுள்ளார். சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவதாக செய்தி வெளியானதில் இருந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்னாள் விராட் கோலியும் ஆர்.சி.பி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
Dhoni with orange gloves , after long time pic.twitter.com/qYVL2hveNA
— MAHIYANK (@Mahiyank_78) March 25, 2022
தற்போது தோனி தனது சர்வதேச வாழ்க்கையின் தொடக்கத்தில் அணிந்திருந்த ஆரஞ்சு நிற கையுறைகளை அணிந்து உள்ளார். இது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம். இதற்கிடையில், விசா வாங்குவதில் தாமதம் காரணமாக மொயீன் அலி முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார். மேலும், தீபக் சாஹரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா எந்த எந்த வீரருடன் களம் இறங்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Vintage SS Orange gloves! @MSDhoni pic.twitter.com/tFyJ4ANoXA
— Dhoni Army TN (@DhoniArmyTN) March 25, 2022
மேலும் படிக்க | இதுவரை இந்திய அணி வீரர்களுக்குள் நடைபெற்ற முக்கிய சண்டைகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR