How To Use Google Pay Lite: மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இன்றும், நாளையும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், மிக்ஜாம் புயல் காரணமாக பலரும் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஆவின் முதல் பல கடைகள் மக்களுக்கு தேவையான பிரெட், பால், பலசரக்கு பொருள்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றன. இதில், பலரும் சேவை நோக்கத்துடன் செய்தாலும், சிறு குறு வியாபாரிகள் மொத்தமாக இலவசமாக கொடுப்பது கடினம். 


அந்த நேரத்தில் பொருள்களை வாங்குபவரிடம் பணம் இருந்தாலும், கையிருப்பு என்றிருப்பது அரிதுதான். எனவே இப்போதைய நிலவரப்படி பலரும் தங்களின் GPAY, Phonepe போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்துவார்கள் இருப்பினும் சென்னை உள்ளிட்ட புயல் பாதித்த இடங்களில் மொபைல் சேவையும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நெட் இல்லாமல் GPAY, Phonepe போன்ற செயலிகள் பணம் செலுத்துவது தற்போது எளிமையாகிவிட்டது. ஆர்பிஐ விதிப்படி, GPAY, Phonepe Lite வெர்ஷன்களில் நெட் இல்லாமல் சிறு சிறு பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதனை எப்படி செய்வது என்று இதில் காணலாம்.


மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: உதவின்னு கேட்டா ஓடோடி செய்யும் அமைச்சர்கள் உதயநிதி, டிஆர்பி ராஜா


Google Pay Lite பயன்படுத்துவது எப்படி?


- Google Pay செயலியில் UPI பின்னைப் பயன்படுத்தாமல் 500 ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இதற்கு கூடுதல் கட்டணமும் தேவையில்லை, KYC வெரிபிக்கேஷனும் தேவையில்லை.  


- Lite பர்ஸில் அதிகபட்ச இருப்புத் தொகை 2 ஆயிரம் ரூபாய். 24 மணிநேரத்திற்குள் மொத்தம் ₹4,000 INR வரை செலவழிக்கலாம்.


- பணப் பரிமாற்றம் மற்றும் கணக்கை மூடுவதற்கும் கட்டணம் இல்லை.


- பணத்தைச் சேர்க்க UPI லைட்டை ஆதரிக்கும் தகுதியான வங்கிக் கணக்கைத் தேர்வுசெய்யவும். 


- உங்கள் UPI லைட் இருப்பில் 2 ஆயிரம் ரூபாய் வரை சேர்க்கவும்.


- உங்களின் UPI Lite இருப்பை அமைத்த பின், 500 ரூபாய்க்குமான பேமெண்ட்டுகளுக்கு UPI Lite ஆனது இயல்பான பேமெண்டாக அமையும்.


PhonePe பயன்படுத்துவது எப்படி?


PhonePe செயலியை திறக்கவும். திரையின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் கிளிக் செய்யவும்.


UPI லைட் என்பதை கிளிக் செய்யவும். 


- உங்கள் UPI லைட் பேலன்ஸில் பணத்தைச் சேர்க்க, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.


- நீங்கள் 2,000 ரூபாயை உங்கள் UPI லைட் இருப்பில் பணத்தைச் சேர்த்தவுடன், PIN நம்பர் இல்லாமல் பணம் செலுத்தலாம். இதைச் செய்ய, வணிகரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது அவர்களின் UPI ஐடியை உள்ளிடவும். நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிட்டு, "செலுத்து" என்பதைத் தட்டவும்.


மேலும் படிக்க | பேசின் பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டிய நீர் மட்டம்... பல ரயில்கள் ரத்து..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ