ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது இந்த நாட்களில் மக்களுக்கு எளிதாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் இப்போது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
How to apply for PAN online: ஒரு நிரந்தர கணக்கு எண் (PAN) என்பது 10 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பான் கார்டில் (Pan Card) உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் இருக்கும். ஆனால் உங்கள் முகவரி இருக்காது.
பான் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது இந்த நாட்களில் மக்களுக்கு எளிதாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் இப்போது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் ஒரு நபர் என்.டி.எஸ்.எல் (NDSL) மற்றும் யு.டி.ஐ.டி.எஸ்.எல் (UTIITSL) வலைத்தளங்கள் மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். NDSL-UTIITSL இரு நிறுவனங்களும் வருமான வரித் துறையின் கீழ் செயல்படுகிறது.
ALSO READ | PAN card தொடர்பான சிக்கல்களை இனி ட்விட்டர் மூலம் சரி செயலாம்..!
ஆன்லைனில் பான் விண்ணப்பிப்பது எப்படி?
1) புதிய பான் விண்ணப்பிக்க என்.எஸ்.டி.எல் தளத்தைத் திறக்கவும்.
2) விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும் - இந்திய குடிமக்களுக்கான புதிய பான்.
3) உங்கள் வகையைத் தேர்ந்தெடுக்கவும் (Individual)
4) பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பியவுடன் "சமர்ப்பி" (Submit) ஐ அழுத்தவும்.
5) "பான் விண்ணப்ப படிவத்தை தொடரவும்" (Continue with the PAN Application Form) பொத்தானைக் கிளிக் செய்க.
ALSO READ | உங்கள் Aadhaar அட்டையில் பதிவு செய்யப்பட்ட Mobile எண் எது? எப்படி தெரிந்துக்கொள்வது
6) உங்கள் டிஜிட்டல் இ-கேஒய்சி (e-KYC) ஐ சமர்ப்பிக்கவும்.
7) இப்போது உங்கள் தனிப்பட்ட விவரங்களை படிவத்தின் அடுத்த பகுதியில் உள்ளிடவும்.
8) படிவத்தின் இந்த பகுதியில் உங்கள் பகுதி குறியீடு, AO வகை மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.
9) இப்போது, 'தொடரவும்' (Proceed) என்பதைக் கிளிக் செய்க.
10) இப்போது, நெட்பேங்கிங் / டெபிட் / கிரெடிட் கார்டு (netbanking/debit/credit card) மூலம் பணம் செலுத்துங்கள்.
11) பணம் வெற்றிகரமாக செலுத்திய பிறகு, 16 இலக்க ஒப்புதல் சீட்டுடன் ஒப்புதல் படிவத்தைப் (acknowledgment slip) பெறுவீர்கள்.
12) இந்த ஒப்புதல் படிவத்தை அசல் (Print) எடுத்துக்கொள்ளுங்கள்
ALSO READ | SMS மூலம் பான் கார்டுடன் ஆதார் அட்டையை எவ்வாறு இணைப்பது!
13) ஒப்புதல் படிவத்தில் வழங்கப்பட்ட இடத்தில் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை (Photograph) இணைக்கவும்.
14) படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் (Self-Attested) ஒப்புதல் படிவத்துடன் இணைக்கவும்.
15) இந்த ஆவணங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய உறையை என்.எஸ்.டி.எல் (NSDL) முகவரிக்கு இடுங்கள்.