தெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...
சீன தயாரிப்பான TikTok சமீபகாலமாக சமூக ஊடக பயன்பாடுகளில் பிரபலமான பயன்பாடக உள்ளது. TikTok பயனர்களில் கனிசமான சதவிகிதித்தனர் இந்தியாவில் தான் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
சீன தயாரிப்பான TikTok சமீபகாலமாக சமூக ஊடக பயன்பாடுகளில் பிரபலமான பயன்பாடக உள்ளது. TikTok பயனர்களில் கனிசமான சதவிகிதித்தனர் இந்தியாவில் தான் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பின்னணி இசையுடன் குறுகிய 15 வினாடி வீடியோக்களை உருவாக்க பயன்பாடு அடிப்படையில் பயனர்களை அனுமதிக்கும் இந்த மொபைல் பயன்பாடு இந்தியர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் உச்ச பிரபலத்தை அடைந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக TikTok செயலினை பயன்படுத்த கூடாது என்ற பிரச்சாரங்கள் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இதற்கான காரணம் என்ன? ஏன் திடீரென TikTok செயலியை பயன்படுத்தக்கூடாது என நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கலாம்.
பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த தமிழக பாட்டியின் TikTok வீடியோ...
இந்த சந்தேகத்திற்கான விடையை தேடி நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கையில் மறு புறம் கூகிள் ப்ளே ஸ்டோரில் TikTok-ன் தரப்புள்ளி 1.1 நட்சத்திரங்களாக குறைந்துள்ளது. இந்த தரக்குறியீடு TikTok பயன்பாட்டின் நம்பகத்தன்மையை குறைப்பதோடு, நாம் நமது ஸ்மார்ட்போனில் TikTok செயலினை பயன்படுத்தலாமா வேண்டாமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
உலக மக்களை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு பின்னர் மக்கள் சீன பயன்பாடுகளையும் தயாரிப்புகளையும் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே TikTok-ன் பயன்பாடும் இந்தியாவில் குறைய துவங்கியுள்ளது. பயன்பாட்டை குறைத்துக்கொண்டது மட்டும் அல்லாமல், தங்கள் சாதனத்தில் இருந்து நிறந்தரமாக நீக்கவும் முடிவு செய்துள்ளனர். எனினும் சிலர் தனது TikTok கணக்கினை எவ்வாறு முழுமையாக நீக்குவது என்று அறியாமல் குழம்பி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவே இந்த பதிவை இன்று நாம் பகிர்ந்துள்ளோம்.
தெலுங்கு வசனத்திற்கு டிக்டாக் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்; வைரலாகும் Video!...
உங்கள் TikTok கணக்கை நிறந்தரமாக நீக்க...
உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியுள்ள TikTok பயன்பாட்டைத் திறக்கவும்.
கீழ் வலது மூலையில் உள்ள Me ஐகானைத் தட்டவும்.
பின்னர் வரும் பக்கத்தில் மேல் வலது மூலையில் உள்ள 3-புள்ளி ஐகானைத் தட்டவும்.
‘Manage my account’ எனும் விருப்பத்திற்குச் செல்லவும்.
Delete account என்னும் விருபத்தை தேர்ந்தெடுக்கவும். அவ்வளவு தான்.
Android, iOS ஸ்மார்ட்போனிலிருந்து TikTok பயன்பாட்டை நீக்க...
உங்கள் TikTok கணக்கை வெற்றிகரமாக நீக்கியதும், உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து பயன்பாட்டை நீக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
Android -ல் TikTok-ஐ நீக்க : Settings > Apps செல்லவும்.
பட்டியலில் உள்ள TikTok பயன்பாட்டைத் தேடி அதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் Uninstall என்பதை தேர்ந்தெடுக்கவும்.
IOS -ல் TikTok-னை நீக்க : உங்கள் iPhone (அ) iPad-ல் TikTok பயன்பாட்டைக் கண்டறியவும்.
பயன்பாட்டு ஐகானை அழுத்திப் பிடிக்கவும்.
‘Delete App’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
TikTok வீழ்ச்சியால் இந்தியாவில் எழுச்சியுறும் Mitron; காரணம் என்ன?...
உங்கள் TikTok கணக்கை நீக்கியதும், உங்கள் எல்லா இடுகைகள், பின்தொடர்பவர்கள் மற்றும் நீங்கள் பின்பற்றிய நபர்களுக்கான அணுகலை இழப்பீர்கள் என்பதை நினைவில் கொள்க. பயனர்பெயரையும் நீங்கள் இழப்பீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.