பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த தமிழக பாட்டியின் TikTok வீடியோ...

தமிழகத்தின் ஒரு பாட்டி மற்றும் அவரது பேரனின் ஒரு சாத்தியமில்லாத மற்றும் முற்றிலும் அபிமான TikTok பயணம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Updated: May 20, 2020, 10:57 AM IST
பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த தமிழக பாட்டியின் TikTok வீடியோ...
Representational Image

தமிழகத்தின் ஒரு பாட்டி மற்றும் அவரது பேரனின் ஒரு சாத்தியமில்லாத மற்றும் முற்றிலும் அபிமான TikTok பயணம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TikTok வந்த பின்பு ஒவ்வொரு தனி நபரும் தங்கள் நடிப்பின் தாகத்தை தணித்து பிரபலமாகத் துவங்கிவிட்டனர். சமூகவலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிக்காட்டியும் பிரபலமாகும் பலருக்கு மத்தியில் சிலர் பெரும் கவணத்தை ஈர்க்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது பேரனுடன் TikTok-ல் கலக்கும் வீடியோ தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளது.

TikTok வீடியோ பகிர்வு தளத்தின் சமீபத்திய ‘கோர் கோர் முக்தே பெ கலா கலா சாஷ்மா சவாலில்’ இவர்கள் இருவரும் கலந்து கொண்டு பதிவிட்ட வீடியோ தான் தற்போது பாலிவுட் ரகிர்களையும் கவர்ந்துள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்தபடி இந்த பாட்டி செய்யும் உடல் அசைவுகள் இணையவாசிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு நீங்கள் நிச்சையம் இந்த ஜோடியின் ரசிகராக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

@akshaypartha

Trending now

##Akshaypartha##love##trending##fun##comedy##funny##tiktok##tiktokindia##dance##celeb##foryou@tiktok##duet##tamil##tamilanda##viral##slowmo##bgm##wow

♬original sound - himi21196

பிரபலமான இந்தி பாடலின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பதிப்பிற்கு சில நகைச்சுவையான நடன நகர்வுகளைக் காண்பிப்பதே ‘கோர் கோர் முக்தே பெ கலா கலா சாஷ்மா’ சவால். இந்த சவாலுக்கு பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இந்த ஜோடி அனைவரையும் பின்தள்ளியுள்ளனர்.

ஒரு நாளைக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. கூடுதலாக, இது 2.1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 2,100 கருத்துகளையும் நெருங்கியுள்ளது. இத்தகைய ஆர்வத்துடன் இந்த ஜோடி சவாலை செய்வதைக் கண்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

தகவல்கள் படி இந்த பாட்டி மற்றும் பேரன் ஜோடி தமிழகத்தில் மிகவும் பிரபலமான TikTok பிரபலங்கள் ஆவர். இவர்களது வீடியோக்கள் தமிழக இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.