ட்விட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக டெலீட் செய்வது இவ்வளவு கடினமா?
ட்விட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக நீக்குவது அவ்வளவு எளிமையான காரியமல்ல, சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அதனை செய்ய வேண்டும்.
ஒருவர் பல காரணங்களுக்காக தனது ட்விட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக டெலீட் செய்ய நினைக்கலாம், இதிலுள்ள சில மாற்றங்களை பயன்படுத்த தெரியாமல் போகலாம் அல்லது இந்த தளம் உங்களது நேரத்தை அதிகமாக பயன்படுத்துவதாக நீங்கள் உணரலாம் அல்லது இதனை பயன்படுத்துவது உங்களை சலிப்படைய செய்யலாம். இதுபோன்ற பல காரணங்களால் நீங்கள் ட்விட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக நீக்க நினைக்கலாம், ஆனால் இதனை செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இதனை நீங்கள் சுலபமாக செய்யலாம்.
மேலும் படிக்க | இனி கூகுள் பிளே ஆப்ஸ்கள் இந்த தகவல்களை உங்களுக்கு தெளிவாக காட்டும்
உங்கள் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கு முன், இப்போது உள்ள அக்கவுண்டிற்கு பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை வரும்காலத்தில் புதிய அக்கவுண்டை உருவாக்கும்போது பயன்படுத்த போகிறீர்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். அப்படி செய்யும் எண்ணம் உங்களிடம் இருக்கும்பட்சத்தில் உங்கள் அக்கவுண்டை நீக்குவதற்கு முன் அதில் ஏற்கனவே வைத்திருந்த மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்வது அவசியமானதாகும், ஏனெனில் நீங்கள் அக்கவுண்டை நீக்கும்போது உங்களது மின்னஞ்சல் ஐடியும் லாக் ஆகிவிடும். இதைப்போலவே யூசர்நேமுக்கும் செய்யவேண்டும், வரும் காலங்களில் பழைய ட்விட்டர் கணக்கிலுள்ள பெயரையே பயன்படுத்த விரும்பினால், பெயரை முதலில் மாற்றிவிட்டு பின்னர் அக்கவுண்டை நீக்க வேண்டும்.
உங்கள் ட்விட்டர் அக்கவுண்டை நீக்க, முதலில் அதை 30 நாட்களுக்கு டீஆக்டிவேட் செய்ய வேண்டும், ஏனெனில் சிலர் நிரந்தரமாக தங்களது அக்கவுண்டை நீக்க விரும்பவில்லை எனில் இந்த 30 நாட்களுக்குள் அவர்களது கணக்கை மீட்டெடுத்து விடலாம். தற்போது அக்கவுண்டை டீஆக்டிவேட் செய்து நிரந்தரமாக எப்படி நீக்குவது என்பது குறித்து இங்கே காண்போம்.
1) முதலில் உங்கள் போனில் உள்ள ட்விட்டருக்கு செல்ல வேண்டும்.
2) மேலே இடதுபுறத்தில் உள்ள உங்கள் ப்ரோபைலை க்ளிக் செய்யவேண்டும்.
3) அதிலுள்ள 'செட்டிங்ஸ் & பிரைவசி' என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
4) இப்போது அதிலுள்ள 'உங்கள் அக்கவுண்ட்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
5) அதன் கீழேயுள்ள 'டீஆக்டிவேட் அக்கவுண்ட்' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
6) பின்னர் திரையில் தெரியும் அனைத்தையும் படித்துமுடித்த பிறகு 'டீஆக்டிவேட்' என்பதை தேர்வு செய்யவும்.
மேலும் படிக்க | ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யலாம் - புதிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR