வங்கியில் இருந்து இந்த மெசேஜ்கள் வந்தால் உடனே டெலிட் பண்ணியிருங்க!
மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இப்போதெல்லாம் போனில் பல மெசேஜ்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பல சலுகைகள் குறித்து இடம்பெறுகின்றன. இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். வங்கிக் கணக்கு மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் அவற்றை நீக்கவும்.
லோன் மெசேஜ்
பல முறை உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வங்கியில் கடன் வழங்கப்படுவதாகவும், இதற்கு உங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றும் செய்தி வரும். உங்கள் தொலைபேசியில் இதுபோன்ற செய்திகள் வந்தால், அவற்றைப் புறக்கணித்து அவற்றை நீக்குவது நல்லது, ஏனெனில் நீங்கள் அதற்கு பதிலளித்தால், நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வங்கி சலுகை வதந்தி
வங்கிக் கணக்கைத் திறப்பதன் மூலமோ அல்லது ஏதேனும் ஒரு திட்டத்தை எடுப்பதன் மூலமோ நீங்கள் பெரும் பலன்களைப் பெறுவீர்கள் என்று உங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற செய்திகளையும் நீங்கள் பெறலாம். இது உங்களுக்கு நேர்ந்தால், அதை புறக்கணிப்பது உங்கள் நலனுக்காக என்னை நம்புங்கள்.
உடனடி லோன் மெசேஜ்
வங்கியால் உங்களுக்கு உடனடி பணக் கடன் வழங்கப்பட்டு, அது மிகவும் எளிதான செயல் என்று கூறப்பட்டால், அது கவலைக்குரிய விஷயம். கவனத்தில் கொள்ள வேண்டிய மெடேஜ். ஏனெனில் உங்களுக்கு அனுப்பப்படும் செய்தி சரிபார்க்கப்படும்போது, அப்படியான லோன் கொடுக்கும் வழக்கம் எந்த ஊடகத்திலும் வரவில்லை என்றால் அதன் பின்னணியில் சதி இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
OTP ஐப் பகிர வேண்டாம்
ஓடிபிஐ பகிருமாறு எந்த செய்தி வந்தாலும் அதனை புறக்கணித்துவிடுங்கள். நீங்கள் அவ்வாறு புறக்கணிக்கவில்லை என்றால் அல்லது அந்த மெசேஜூக்கு ரிப்ளை கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் ஒருபோதும் யாருக்கும் ஓடிபிஐ பகிர வேண்டாம்.
மேலும் படிக்க | Firefox பிரவுசர் யூஸ் பண்றவங்க எல்லாம் உஷாரு! அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ