Wi-Fiல் இன்டர்நெட் மெதுவாக கிடைக்கிறதா? இதன் மூலம் நீங்களே சரி செய்யலாம்!
Wi-Fi Router Placement: வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைஃபை ரூட்டரை சரியான இடத்தில் பொருந்தவில்லை என்றால், இன்டர்நெட் வேகமாக கிடைக்காது.
Wi-Fi Router Placement: தற்போது பலரது வீடுகளிலும் வைபை பிராட்பேண்ட் இணைக்கப்பட்டு வருகிறது, இதற்கு காரணம் பலரும் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு அலுவலகங்களில் மட்டுமே வைஃபை ரூட்டர் அதிகமாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த ஏரியாக்களை பொறுத்து சிறந்த கம்பெனிகளை தேர்வு செய்து வீட்டில் அல்லது அலுவலகங்களில் வைபை கனெக்சன் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு எவ்வளவு அதிகமான விலையில் வைபை கனெக்சன் எடுத்திருந்தாலும் இணையத்தின் வேகம் கம்மியாகவே கிடைக்கும்.
மேலும் படிக்க | 11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம் தவறான இடத்தில் வைஃபை ரூட்டரை வைப்பது ஆகும், நீங்கள் எவ்வளவு அதிகமான விலையில் திட்டத்தை எடுத்து இருந்தாலும் வைஃபை ரூட்டரை வீட்டில் அல்லது அலுவலகத்தில் சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால் உங்களுக்கு போதிய வேகத்தில் இன்டர்நெட் கிடைக்காது. எனவே எந்த இடத்தில் வைஃபை ரூட்டரை வைத்தால் இணையத்தின் வேகம் அதிகமாக கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இந்த இடங்களில் வைஃபை ரூட்டரை வைக்க வேண்டாம்
உங்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று மாடி இருந்தால் வைஃபை ரூட்டரை நடுத்தர தளத்தில் வைக்கவும். அப்போதுதான் மேல் மற்றும் கீழ் தளங்களுக்கு எந்த விதை இடையூறும் இல்லாமல் வைஃபை கனெக்சன் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் கீழ்தளத்திலோ அல்லது மேல் தளத்திலோ வைஃபை ரூட்டரை மாட்டினால் மற்ற தளங்களுக்கு இணையத்தின் வேகம் மெதுவாகவே கிடைக்கும். அதேபோல பலரது வீடுகளில் வைஃபை ரூட்டர் டேபிள்களில் வைக்கப்படுகிறது, இதன் காரணமாகவும் இணையத்தின் வேகம் பாதிக்கப்படலாம். எப்போதும் வைபை ரூட்டரை வீட்டில் அல்லது அலுவலகங்களில் உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து இடங்களிலும் வைஃபை வேகம் சீராக இருக்கும்.
வைஃபை ரூட்டரை பெட்ரூம் அல்லது எப்போதும் மூடி இருக்கும் அறையில் வைக்க வேண்டாம், அப்படி வைத்தால் இணையத்தின் வேகம் பாதிக்கப்படும். ஹாலில் அல்லது வீட்டின் முக்கியமான இடத்தில் வைப்பது நல்லது. அதேபோல வீட்டின் முன்புற அறையில் வைஃபை ரூட்டரை வைக்க கூடாது. அப்படி வைத்தால் முழு வீட்டிற்கும் அதன் வேகம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
வேறு சில காரணங்கள்
மேலே குறிப்பிட்ட காரணங்கள் தவிர வேறு சில காரணங்களும் இணையத்தின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். அதாவது பீக் நேரங்களில் நெட்வொர்க் சரியாக கிடைக்காமல் போகலாம். ஒரே நேரத்தில் பல சாதனங்கள் உங்கள் வைஃபயில் கனெக் ஆகி இருந்தால், இணையத்தின் வேகம் மெதுவாக கிடைக்க வாய்ப்புள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுவாகவே இணையத்தின் வேகம் குறைவாக இருக்கும். ஏனெனில் இந்த சமயத்தில் அனைவரும் இணையத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பார்கள்.
இதற்கு மேலும் உங்கள் வைஃபை இணைய வேகம் அதிகரிக்கவில்லை என்றால் உங்கள் இணைய சேவை வழங்குபவரை மாற்றுவது நல்லது. வெவ்வேறு இணைய வழங்குநர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்வு செய்து உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் பகுதியில் எந்த இணைய சேவை நன்றாக உள்ளது என்று விசாரித்து பொருத்துவதும் சிறந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ