Google Payஐப் பயன்படுத்த இனி உங்களுக்கு பாஸ்வேர்டு தேவைப்படாது. ஏன் வங்கியின் டெபிட் கார்டு கூட தேவையில்லாமல் UPI (Unified Payments Interface) ஆதார் ஒன்றை மட்டும் கொண்டு இந்த கணக்கை வாடிக்கையாளர்கள் உபயோக்கலாம். இந்த அப்டேட் வருவதற்கு முன்பு உங்கள் வங்கிக் கணக்கில் UPI செயல்படுத்துவதற்கு டெபிட் கார்டு கட்டாயமாக இருக்கும். ஆனால் புதிய மாற்றமாக உங்கள் ஆதாரைக் கொண்டே யுபிஐ ஐடிஐ உபயோகித்துவிடலாம். ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் பழைய டெபிட் கார்டு முறையைப் பயன்படுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Amazon Prime Day Sale: பல வித பொருட்களில் பக்காவான தள்ளுபடி.. ஜூலை 15..ரெடியா இருங்க


ஆதாரைப் பயன்படுத்தி Google Pay-ல் UPI ஐடியை எவ்வாறு செயல்படுத்துவது?


- உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் GPay (Google Pay)ஐப் பதிவிறக்கித் ஓபன் செய்யவும்
- உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் ஆதாருக்கு நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். 
- Google Payயில் பதிவு செய்யும் போது மின்னஞ்சல் முகவரியையும் சேர்க்க வேண்டும்.
- ஏற்கனவே உள்ள Google கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்த பிறகு அல்லது உள்நுழைந்த பிறகு, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் கிளிக் செய்யவும்.
- அங்கே கட்டண முறைகளைத் (Payment Options) கிளிக் செய்யவும். அதைத் தொடர்ந்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுக்கவும். 
- இப்போது UPI ஐடிகளை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு உங்களுக்கான சில UPI ஐடிகளைக் காண்பீர்கள்.
- நீங்கள் விரும்பும் பல UPI ஐடிகளை நீங்கள் தேர்வு செய்யலாம், பதிவு செயல்பாட்டின் போது நீங்கள் ஒரு ஐடியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். 
- நீங்கள் தேர்ந்தெடுத்த UPI ஐடிக்கு அடுத்துள்ள + குறியைத் தட்டவும்.
- உங்கள் வங்கிக் கணக்குடன் ஐடியை அங்கீகரிக்க Google இப்போது கேட்கும். "உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கவும்" என்று வரும் திரையில் ஆதாரைத் தேர்வு செய்யவும்.
- உங்கள் ஆதாரின் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிடவும், ஏனெனில் மீதமுள்ள எண்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தானாகவே பெறப்படும்.
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு, அடுத்த திரையில் நீங்கள் உள்ளிட வேண்டிய OTP ஐப் பெறுவீர்கள்.
- பின்னர் உங்கள் வங்கியிலிருந்து OTP பெறுவீர்கள். அடுத்த திரையில் அதை உள்ளிடவும்.
- இப்போது உங்கள் கணக்கிற்கு 4 அல்லது 6 இலக்க UPI பின்னை அமைத்து, அடுத்த திரையில் மீண்டும் PIN ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
 - கூகுள் பே கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது.


மேலும் படிக்க | அதிரடி சலுகை! ரூ.20000க்குள் கிடைக்கும் சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ