ஸ்மார்ட்போன் ஹேங்க் பிரச்சனையா? இதனை செய்யுங்கள்
உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங்காவது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றால், உடனே இந்த டிப்ஸை ஃபாலோ செய்து, அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரிதிருக்கும் சூழலில், அவை இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கும் முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆரம்பத்தில் போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்த போன்கள் இப்போது என்டர்டெயின்மென்ட் சாதனமாகவும் மாறிவிட்டது. இதுதவிர, ஆபீஸூக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தே செய்துவிட முடியும்.
அந்தளவுக்கு ஸ்மார்ட்போன் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு, சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அதில் ஒன்று ஹேங்கிங் (Hanging). அதிக பயன்பாடு, வைரஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இத்தகைய பிரச்சனைகளை ஸ்மார்ட்போன்கள் எதிர்கொள்ளும். இந்தப் பிரச்சனையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் மூன்றே மூன்று விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Tecno Spark 8C Price: ரூ.8,000-ஐ விட குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள்
1. சுத்தம் செய்தல்
ஸ்மார்ட்போன்கள் ஹேங்க் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு மிக முக்கிய காரணம், அதன் ஸ்டோரேஜ் முழுமையாக நிரம்பியிருப்பது. தேவையற்ற பைல்கள் உள்ளிட்டவைகளை சேமித்து வைக்கும்போது ஏற்படும் இடப்பற்றாக்குறையால் போன் புதிய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்காது. அதனால், போனில் எப்போதும் குறிப்பிட்ட ஸ்டோரேஜ் காலியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவையற்ற பைல்களை நீக்கிவிட வேண்டும்.
2. பைல்களை நீக்குதல்
ஒரே பைல்கள் இரண்டு முறை போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த பைல்களால் மட்டுமே ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்படும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யும்போது, இரண்டு பைல்கள் சேமித்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், அந்த பைல்களை அடையாளம் கண்டு நீக்குங்கள்.
3. இண்டர்நெட்
இண்டர்நெட் பயன்படுத்தும்போது, பிரவுசிங் பைல்கள் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் கிளீனர் செயலிகளை பயன்படுத்தினால், இந்த டெம்பரவரி பைல்களை எளிதாக நீக்க முடியும். இந்த முறைகளை சரியாக பின்பற்றினீர்கள் என்றால், போன் அடிக்கடி ஹேங்க் ஆகும் பிரச்சனை உங்களுக்கு ஏற்படாது.
மேலும் படிக்க | மிகக்குறைந்த விலையில் அறிமுகம் ஆன அட்டகாசமான ஸ்மார்ட்போன்: அசத்தும் Itel A27
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR