ஐடெல் தனது எண்ட்ரி நிலை ஸ்மார்ட்போனை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஏ27 (Itel A27) இன் விலை 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் அம்சங்கள் பிரமாண்டமாக உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது இரண்டு சிம் கார்டுகளிலும் இரட்டை VoLTE ஆதரவுடன் 4ஜி இணைப்பை வழங்குகிறது. இது குறிப்பிடப்படாத பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பிராசசர் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஐடெல் ஏ27 போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஐடெல் ஏ27-ன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் ஐடெல் ஏ27-ன் விலை
இந்தியாவில் ஐடெல் ஏ27-ன் விலை ரூ.5,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை 2ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வகைக்கானது மட்டுமே ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. கிரிஸ்டல் ப்ளூ, டீப் கிரே மற்றும் சில்வர் பர்பில் ஆகிய வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இதை வாங்கலாம். ஐடெல்லின் படி, ஐடெல் ஏ27-ஐ ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்க முடியும்.
மேலும் படிக்க | அட்டகாசமான போனை அறிமுகம் செய்தது Poco: நம்ப முடியாத விலை, நவீன அம்சங்கள்
ஐடெல் ஏA27 விவரக்குறிப்புகள்
ஐடெல் ஏ27 ஆண்ட்ராய்ட் 11-ல் (கோ எடிஷன்) இயங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் FW + ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஐடெல் ஏA27 ஆனது 2ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஒரு குறிப்பிடப்படாத குவாட் கோர் 1.4GHz செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆப்டிக்ஸின் முகப்பில், ஐடெல் ஏ27, 5 மெகாபிக்சல் AI பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் 2 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
ஐடெல் ஏ27 பேட்டரி
ஐடெல் ஏ27 ஃபேஸ் அன்லாக் சப்போர்டைக் கொண்டுள்ளது. மேலும் இது கைரேகை சென்சாருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி இன்பிள்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி (128ஜிபி வரை) கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்க முடியும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் கிடைக்கிறது Redmi போன், முந்துங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR