Whatsapp Web: அறிமுகம் செய்யப்பட்டுள்ள அற்புதமான அம்சம்... பயன்படுத்துவது எப்படி..
சமூக ஊடக செயலியான Whatsapp தனது Web Edition-ல் Dark Mode மற்றும் அம்சத்தைத் தொடங்கியுள்ளது
Whatsapp Web-ல் இந்த அற்புதமான அம்சம் வந்துள்ளது
வாட்ஸ்அப் தனது வெப் எடிஷனில், டார்க் மோட் என்னும் அம்சத்தை தொடங்கியுள்ளது.
புதுடெல்லி(New Delhi): ஃபேஸ்புக்கிற்கு இணையான அளவில் பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் (Whatsapp) தனது வெப் எடிஷனில் (Web Edition) டார்க் மோட் (Dark Mode Feature) அம்சத்தைத் தொடங்கியுள்ளது. இது தவிர, நிறுவனம் தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்காக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ( Animation Stickers) மற்றும் கியூஆர் குறியீடுகளையும் ( QR Code) அறிமுகப்படுத்தியுள்ளது.
ALSO READ | Zoom, Google Meet-க்கு போட்டியாக களமிறங்கும் 'JioMeet'.... சிறப்பு அம்சம் என்ன?
Web அல்லது டெஸ்க்டாப்பில் ( desk Top) வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்கள் டார்க் மோட் அம்சத்தினால் பெரிதும் பயனடைவார்கள். இந்த அம்சத்தை இயக்க, முதலில் நீங்கள் Google Play Store அல்லது Apple App Store இலிருந்து WhatsApp ஐ அப்டேட் (Update) வேண்டும். QR குறியீடு ( QR Code) மூலம் வெர்ஃபை வேண்டும்.
இதற்குப் பிறகு, செட்டிங்குகளுக்கு சென்று தீம் ஆப்ஷனை (Theme Option) தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் டார்க் மோட் அம்சத்தை தொடங்கலாம்.
இந்த சில புதிய அம்சங்கள் அடுத்த சில வாரங்களில் ஸ்டேபிள் அப்டேட்டில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்கள் விரைவில் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனில் அனிமேஷன் ஸ்டிக்கர்களைக் காண முடியும். பெயரை பார்த்து அறிந்து கொள்வதைப் போல, இந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் GIF / Video ஆகியவற்றை போல் செயல்படும்.
ALSO READ | TikTok-ஐ மறந்து விடுங்கள்!! இனி HiPi App பயன்படுத்துங்கள்; Zee5 அதிரடி
வாட்ஸ்அப் க்ருப் வீடியோ அழைப்புகளும் (Whatapp group video call) மேம்படுத்தப்படுகிறது. க்ரூப் வீடியோ அழைப்புகளுக்கு, பயனர்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் வீடியோ கால் செய்யலாம். தற்போது, வாட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பில் 8 பேர் மட்டுமே இணையலாம். பயனர்களை சிம்பிள் என்பதை அழுத்துவதன் மூலம் வீடியோவை முழு திரையிலும் காணலாம்.
வாட்ஸ் அப்பில் சேட் செய்ய QR கோட் அம்சத்தையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. பயனர்கள் சேட் செய்யும் முறையை எளிதாக்குவதற்கு செயலியில் QR குறியீடு கிடைக்கும், இதனால் பயனர்கள் புதிய தொடர்புகளை எளிதாக இணைக்க முடியும். அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம், மற்ற பயனரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்வது தான். அந்த நபர் அவர்களின் வாட்ஸ்அப்பில் இணைக்கப்படுவார்.