ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான JioMeet செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜியோமீட் செயலியில் ஒரே சமயத்தில் 100 பேருடன் வீடியோ கால் மூலம் பேச முடியும். மேலும், இதன் மூலம் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு உரையாடல்களை நடத்த முடியும். ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, iOS, விண்டோஸ், Make OS மற்றும் இணையம் என பல்வேறு தளங்களில் கிடைக்கிறது.
பயனர்கள் இந்த செயலியினை ஜியோமீட் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த ஜியோ செயலி கூகுள் பிளே மற்றும் கூகுள் ஸ்டோரில் கிடைக்கிறது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்பட சில பிரபல வீடியோ கான்பரன்சிங் டூல்களுக்கு இந்த ஆப் போட்டியாக களத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.
ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்தும் ஜியோ மீட் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ID-யை ஜியோமீட் உடன் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் இணைப்பு கிடைக்கும். ஹெச்டி தரத்துடன், இலவசமாக இந்த இணைப்பை பெறலாம். கணக்கில்லாத வகையில் இந்த ஆப் மூலம் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம். இதற்கு என்று தனியாக பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளலாம்.
READ | TikTok-ஐ மறந்து விடுங்கள்!! இனி HiPi App பயன்படுத்துங்கள்; Zee5 அதிரடி
ஜியோமீட் அழைப்புகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்வதோடு, பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பயனர்கள் அனுமதியின்றி அழைப்புகளில் பங்கேற்பதை தவிர்க்க வெய்டிங் ரூம் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.