Amazon Great Freedom Festival விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 4, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் போது எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறைந்த விலையில் போனை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும். அதன்படி ஆப்பிள் ஐபோன் 14 பற்றி பேசுகையில், இந்த போனை நீங்கள் மிகக் குறைந்த விலையில் வீட்டிற்கு எடுத்து வரலாம். இந்த விற்பனையில் பிளாட் தள்ளுபடி உட்பட பல பேங் ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே iPhone 14 இல் என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை இப்போது விரிவாக தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிள் ஐபோன் 14 விலை:
இந்த போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வெரியண்ட்டின் விலை ரூ.79,900 ஆகும். இந்த போனில் 16 சதவீத பிளாட் தள்ளுபடியுடன் ரூ.66999க்கு வாங்கலாம். அத்துடன் Amazon இல் (Amazon Great Freedom Festival Sale 2023) இந்த போனுக்கு 4.5 ஸ்டார் வங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Amazon Great Freedom Festival Sale: இதில் எல்லாம் 80% வரை தள்ளுபடி... வாங்க தயாரா?



ஐபோன் 14 ஐ வாங்குவதற்கு முன் இந்த முக்கியமான தகவலை அறிந்து கொள்ளுங்கள்


வங்கி சலுகைகள் மற்றும் EMI: உங்களிடம் எஸ்பிஐ (SBI) கார்டு இருந்தால், போனின் ரூ.1,000 வரை தள்ளுபடி கிடைக்கும். EMI பரிவர்த்தனைகளுக்கு இந்த அட்டையைப் பயன்படுத்தினால் இந்த சலுகை வழங்கப்படும். மறுபுறம் EMI பற்றி பேசுகையில், நிலையான இஎம்ஐயின் கீழ், ஒவ்வொரு மாதமும் ரூ.3,217 செலுத்தி தொலைபேசியை வாங்கலாம். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டில் மட்டுமே நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கிறது, இதற்கு நீங்கள் மாதம் ரூ.11,167 செலுத்த வேண்டும்.


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பற்றி பேசுகையில், உங்கள் வீட்டில் பழைய போன் இருந்தால் அதை இந்த Amazon Great Freedom Festival விற்பனையின் மூலம் எக்ஸ்சேஞ்ச் செய்துக் கொள்ளலாம். இதைச் செய்தால், 54,950 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். நீங்கள் முழு பரிவர்த்தனை மதிப்பைப் பெற்றால், இந்த (iPhone 14) தொலைபேசியை வெறும் ரூ.12,049 க்கு பெறலாம்.


ஐபோன் 14 இன் டிஸ்ப்ளே மற்றும் ப்ரோசெஸ்ஸர்:


இந்த போனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இந்த போனில் A15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேஸ் ஐடி அம்சம் போனில் உள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வாங்கலாம்.



ஐபோன் 14 இன் மற்ற அம்சங்கள்:


டூயல் ரியர் கேமரா போனில் உள்ளது. இதன் முதல் சென்சார் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகும். அதே நேரத்தில், இரண்டாவது 12 மெகாபிக்சல் அகல சென்சார் ஆகும். போனில் 12 மெகாபிக்சல்கள் TrueDepth சென்சார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் IP68 மதிப்பீட்டுடன் வருகிறது, இது தண்ணீரை எதிர்க்கும் திறன் கொண்டது.


மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல்லின் அதிரடி ஆபர்கள்! 5ஜி டேட்டா முற்றிலும் இலவசம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ