Amazon Great Freedom Festival Sale: இதில் எல்லாம் 80% வரை தள்ளுபடி... வாங்க தயாரா?

Amazon Great Freedom Festival Sale: அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2023, 10:19 AM IST
  • ஸ்மார்ட்போன்களில் அசத்தலான தள்ளுபடிகள்.
  • ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள்.
  • வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி
Amazon Great Freedom Festival Sale: இதில் எல்லாம் 80% வரை தள்ளுபடி... வாங்க தயாரா?  title=

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Great Freedom Festival sale) இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான அமெசானின் இந்த அசத்தலான விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேமிங் கியர் வரையிலான தயாரிப்புகளின் வரம்பில் அதிக தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். மடிக்கணினிகள் மற்றும் கேமிங் மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் கணினி பாகங்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகளின் டேப்லெட்டுகள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் அதிக தள்ளுபடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அலெக்சா-இயக்கப்பட்ட தயாரிப்புகள், ஃபயர் டிவி மற்றும் கிண்டில் சாதனங்கள் உள்ளிட்ட அமேசானின் சொந்த சாதனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 55% வரை தள்ளுபடிகள் கிடைக்கக்கூடும். 

ஸ்மார்ட்போன்களில் அசத்தலான தள்ளுபடிகள்

சாம்சங் கேலக்சி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) முதல் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) வரை, ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய தள்ளுபடிகள் இருக்கும் என தெரிய வந்துள்ளது. சமீபத்திய Samsung Galaxy M14 5G, OnePlus Nord 3 அல்லது Realme Narzo 60 Pro போன்ற ஸ்மார்ட்போன்களை வாங்க எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் இந்த விற்பனையை பயன்படுத்தி அவற்றை வாங்கலாம். அமேசானின் வரவிருக்கும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது இந்த மாடல்கள் மற்றும் இன்னும் பலவற்றில் கவர்ச்சிகரமான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் உறுதியளிக்கிறது. இந்த விற்பனை குறித்த சரியான புள்ளிவிவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் வெளியிட்ட தகவலின்படி, முன்னணி பிராண்டுகளின் தொலைபேசிகளில் 40% வரையிலான தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறக்கூடும். 

லேப்டாப், வயர்லெஸ் இயர்பட்ஸ்

நீங்கள் புதிய லேப்டாப் அல்லது வயர்லெஸ் இயர்பட்ஸை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த அமேசான் விற்பனை அதற்கான சரியான நேரமாக இருக்கும். இந்த பொருட்களுக்கு சேலில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மடிக்கணினிகள் மற்றும் இயர்போன்கள் முதல் ஸ்மார்ட்வாட்ச்கள் வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடிகள் இருக்கும் என அமேசானின் விளம்பரங்களில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு மட்டுமே அதிக தள்ளுபடிகள் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
ஹார்ட் டிரைவ்கள், SSD -கள் மற்றும் ஃபிளாஷ் டிரைவ்கள் போன்ற சேமிப்பக தீர்வுகளும் குறிப்பிடத்தக்க விலைக் குறைப்புகளைக் காணலாம். இவற்றில் 70% வரை தள்ளுபடி இருக்கக்கூடும். 

ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள்

ஸ்மார்ட் டிவிகள் 60% வரையிலான தள்ளுபடியுடன் விற்கப்படக்கூடும். மேலும் பிரீமியம் டிவிகள் 55% வரை தள்ளுபடியுடன் வழங்கப்படலாம்.

மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல்லின் அதிரடி ஆபர்கள்! 5ஜி டேட்டா முற்றிலும் இலவசம்!

வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி

சலவை இயந்திரங்கள் (வாஷிங் மெஷீன்) மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் (ஃப்ரிட்ஜ்) போன்ற வீட்டு உபயோகப் பொருட்களிலும் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேமர்கள் பிளேஸ்டேஷன் 5 அல்லது பிற கேமிங் தயாரிப்புகளில் பேரம் பேசலாம். இவற்றில் 50% வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என அமேசான் டீஸ் செய்துள்ளது. மேலும், கணிசமான 80% விலை தள்ளிபடியிலும் கேம்கள் விற்கப்படலாம் என்பது கூடுதல் தகவலாகும். 

கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

மேற்கூறிய டீல்கள் மட்டும் இல்லாமல், எஸ்பிஐ கார்டு பயனர்கள் கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் கூடுதல் 10% உடனடி தள்ளுபடியை பெற முடியும். அமேசானின் இந்த சேலில் ஷாப்பிங் செய்பவர்கள் ரூ. 5,000 வரை கேஷ்பேக் மற்றும் 30 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு 30% வரை கூடுதல் தள்ளுபடியையும் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

மேலும் படிக்க | ஜீயோவின் மிக மலிவான JioBook Laptop: முக்கிய அம்சங்கள்... வாங்கும் விவரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News