நீங்கள் பிரீமியம் தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், நீங்கள் பிரீமியம் தொலைபேசியை மலிவாக வாங்கலாம். ஆம், ரூ.109000 விலையிலான கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி போன் அமேசானில் ரூ.35000க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. கூகுளின் சமீபத்திய வெளியீடுகளான Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஆகியவை மார்க்கெட்டில் மிகவும் காஸ்ட்லியான மொபைல்களில் ஒன்றாக இருக்கின்றன. ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் அற்புதமான கேமராக்கள் இந்த இரண்டு மொபைல்களுக்குமான ஹைலைட். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகுள் பிக்சல் 7 ப்ரோ மொபைலை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கூகுள் பிக்சலின் இந்த பிரீமியம் ஃபிளாக்ஷிப் போனை நீங்கள் மலிவாக வாங்கலாம். ஆம், கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி அமேசானில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் சலுகைகளுக்கப் பிறகு வெறும் 35,000-க்கும் குறைவான விலையில் நீங்கள் மொபைலை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.


மேலும் படிக்க | மலிவான விலையில் ஐபோன் 11! ரூ. 20000 வரை அதிரடி தள்ளுபடி


கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி விலை 


கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி அமேசானில் 54 சதவீதம் தள்ளுபடி பெறுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் கொண்ட கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி மொபைலின் விலை ரூ.49,999 ஆக குறைந்துள்ளது. இந்த போனின் உண்மையான விலை ரூ.1,09,000. அமெக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 1500 ரூபாய் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.13700 தள்ளுபடி பெறலாம்.


பேங்க் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் டீலுக்குப் பிறகு கூகுள் பிக்சல் 6 ப்ரோ ரூ.34799-க்கு கிடைக்கும். எனினும், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், உங்கள் பழைய போனின் விலை என்ன என்பது அந்த போனின் நிலையைப் பார்த்த பிறகே முடிவு செய்யப்படும்.


கூகுள் பிக்சல் 6 ப்ரோ: இந்த ஃபோனை வாங்க வேண்டுமா?


கூகுள் பிக்சல் 6 ப்ரோ வேரியண்ட் கூகுளின் சொந்த டென்சர் சிப்செட் மற்றும் பிற உயர்நிலை அம்சங்கள் மற்றும் சிறந்த கேமரா அமைப்புடன் வருகிறது. ஃபோனில் 6.71 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, ஃபோனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50MP முதன்மை கேமரா உள்ளது. இது தவிர, இது 48MP மற்றும் 12MP இரண்டாம் நிலை கேமராக்களுடன் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 11.1 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாதனம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் Li-ion 5003mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 365 நாட்கள் வேலிடிட்டி..ஏர்டெல்லின் அசர வைக்கும் ரீசார்ஜ் திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ