ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தற்போது ஐபோன் மொபைல் போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் ஐபோன் ஸ்மார்ட்போனையும் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கான நேரம். ஏனென்றால் மிகவும் மலிவான விலையில் ஐபோன் போனை வாங்கலாம். அதாவது iPhone 11 போனை வாங்க நினைத்தால், அதிக அளவில் தள்ளுபடி மற்றும் சலுகை கிடைக்கிறது. இது ஐபோன் நிறுவனத்தின் மலிவான ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த iPhone 11 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் நடைபெற்று வருகின்றது. இங்கு நீங்கள் ஐபோன் 11 ஐ 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்கலாம். இப்போது எப்படி என்று நீங்கள் யோசிக்க வேண்டும்? எனவே இந்த சலுகை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாவிற்கும் வருகிறது கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!
ஐபோன் 11 இந்தியாவில் என்ன விலை
ஐபோன் 11 (64ஜிபி) விலை ரூ.43,900 ஆகும். இந்த போன் ஃப்ளிப்கார்ட் இல் ரூ.2,901 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதாவது கார்டு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் இன்சென்டிவ் இல்லாமல் ரூ.40,999க்கு போனை வாங்கலாம். அத்துடன் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் போனின் விலையை இன்னுமும் குறையும்.
ஐபோன் 11 வங்கி சலுகைகள்
இப்போது நாம் வங்கி சலுகை பற்றி பேசுகையில்., Axis Bank, HSBC, IndusInd Bank அல்லது ஒரு கார்டு மூலம் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் ரூ.1,000 சேமிக்கலாம். அதன் பிறகு போனின் விலை ரூ.39,999 ஆக இருக்கும். இது தவிர, Flipkart எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே உங்கள் பழைய போனை மாற்றினால் இந்த முழு தள்ளுபடிடை நீங்கள் பெறலாம். முழுமையாக ஆஃப் பெற்றால், போனின் விலை ரூ.19,999 ஆக இருக்கும்.
ஐபோன் 11 விவரக்குறிப்புகள்
ஐபோன் 11 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி டிஸ்ப்ளே ஐ கொண்டுள்ளது. ஃபோன் A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12MP பின்புற கேமரா மற்றும் 12MP முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
மேலும் படிக்க | அமேசான் ஆஃபர்..! ரூ.1 லட்சம் மொபைல் வெறும் 35 ஆயிரம் ரூபாய் விலையில்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ