Google CEO Sundar Pichai: உலகத்தின் நம்பர் 1 இணைய தேடுபொறியான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகிப்பவர் சுந்தர் பிச்சை. இவர் உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர். குறிப்பாக, இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் இந்தியாவில் இவர்மீது அதிக கவனம் எப்போதும் இருக்கும். கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்த கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுந்தர், கடந்த 2015ஆம் ஆண்டில் சிஇஓ-ஆக பொறுப்பேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தலைமையில் கூகுள் நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி கண்டது எனலாம். அந்தளவிற்கு இவரது தலைமையில் கூகுள் பல மாற்றங்களையும் சந்தித்தது, புதிய விஷயங்களும் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், கூகுள் சிஇஓவாக இருக்கும் சுந்தர் பிச்சையை அந்த பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.


விமர்சனத்திற்குள்ளான ஜெமினி


இந்த புற அழுத்தத்திற்கு முக்கிய காரணம், கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஜெமினி சாட்பாட்தான். ஜெமினி (Gemini) என்பது ChatGPT போன்று கூகுள் நிறுவனத்தால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். இந்த ஜெமினி சாட்பாட் மூலம்தான் சுந்தர் பிச்சைக்கு பெரும் பிரச்னையே ஏற்பட்டுள்ளது. மேலும், அதன் பங்குகளும் சரிவை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்குகள்... இந்த AI கருவி உங்களுக்கு உதவும்..!


ஜெமினி சாட்பாட்டின் AI Image Generation என்ற முக்கிய அம்சம் கடும் சர்ச்சையில் சிக்கி, பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால், ஜெமினி சாட்பாட்டில் இருந்து அந்த அம்சம் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சர்ச்சை, கலாச்சராம் சார்ந்த பிரச்னைகள் வரை சென்று நிலைமை மோசமடைந்தது. இதனால், சிஇஓ மாற்றத்திற்கான கோரிக்கைகள் எழ வழிவகுத்துள்ளது. அதாவது, ஜெமினி சாட்பாட்டின் இந்த அம்சம் வரலாற்று ரீதியாக தவறான புரிதலில் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. 


தாக்குப் பிடிப்பாரா சுந்தர் பிச்சை...?


டெக்னாலாஜி உலகமே AI சார்ந்து இயங்கி வரும் நிலையில், அந்த ரேஸில் கூகுள் நிறுவனம் நீடிக்கச் செய்ய சுந்தர் பிச்சையால் முடியுமா என்ற கேள்வியை பலரும் தற்போது எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, பென் தாம்சன் உள்ளிட்ட பிரபல ஆய்வாளர்கள், கூகுளின் பெருநிறுவன கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் அவசியம் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 


மேலும், ஜெமினியின் AI Image Generation அம்சம் மட்டுமின்றி Text Generation அம்சத்திலும் கூட சில அபத்தமான விஷயங்கள் இருப்பதாக கருத்துகள் தெரிவக்கப்படுகின்றன.  இது AI சார்ந்த ரேஸில் கூகுள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை குறைப்பதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.


கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-இன் சிஇஓவாக செயலாற்றும் சுந்தர் பிச்சை, மாறி வரும் துறை சார்ந்த சூழலில் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதே கூகுள் நிறுவனம் நிதி ரீதியான சிக்கலில் சிக்கி ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பசங்களுக்கு Maths வராதா... இந்த ஆப் மூலம் ஈஸியா தெரிஞ்சிக்கலாம் - இப்போவே பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ