ரூ. 21 ஆயிரத்தில் ஆப்பிள் ஐபோன் 13... ஆப்பர்களை அள்ளிவீசும் பிளிப்கார்ட்!
iPhone 13 In Flipkart Sale: ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மொபைல் தற்போது 59 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும், தற்போது அதில், 37 ஆயிரம் ரூபாய் வரையில் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது.
iPhone 13 In Flipkart Sale: உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபோன் 15 சீரிஸ் கடந்த செப் 12ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் செப். 22ஆம் தேதியான இன்று ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு வந்தது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமான நிலையில், அதன் முந்தைய மாடல்களான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 உள்ளிட்ட மொபைல்களின் விலை கணிசமாக குறைந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
குறிப்பாக, ஐபோன் 13 இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மையங்களில் மலிவான விலையில் கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 13 மாடல், 2021ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 900 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய காலகட்டத்தில் அது சுமார் 20 ஆயிரம் ரூபாய் குறைந்து, 59 ஆயிரத்து 900 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது.
இருப்பினும், நீங்கள் ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மொபைல்களை பிளிப்கார்ட்டில் இருந்து 21 ஆயிரத்து 899 ரூபாய் என குறைந்த விலையிலேயே வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 13 7 ஆயிரத்து 401 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் 52 ஆயிரத்து 499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது தவிர, வாங்குபவர்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக 30 ஆயிரத்து 600 ரூபாய் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது. அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம், வாங்குபவர்கள் ஆப்பிள் ஐபோன் 13 மொபைலை பிளிப்கார்ட் விற்பனையில் இருந்து வெறும் 21,899 ரூபாயில் பெறலாம்.
மேலும் படிக்க | இனி எப்பவும் ஜாலியா புல்லட் ஓட்டலாம் விலைக்கு வாங்காமலேயே!
ஐபோன் 13: முக்கிய அம்சங்கள்
ஆப்பிள் ஐபோன் 13 மொபைல் ஆனது 4K Dolby Vision HDR ரெக்கார்டிங்குடன் 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது Night Mode வசதியுடன் கூடிய 12MP TrueDepth முன்புற கேமராவையும் பெறுகிறது. சாதனம் 17 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கிறது. இது ஆப்பிள் ஐபோன் 14 மாடல் போன்ற அம்சங்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது மற்றும் நீங்கள் ஆப்பிள் ஐபோன் 13 மாடலை விட பட்ஜெட்டில் பிரீமியம் ஆப்பிள் ஐபோனை வாங்க திட்டமிட்டால், இது ஒரு சிறந்த தேர்வாகும்.
ஆப்பிள் ஐபோன் 13 மூலைவிட்ட பின்புற கேமரா வடிவமைப்பை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் ஐபோன் 13 மாடல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது நிறுவனத்தின் முதன்மையான ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இன்னும் குறைந்த விலையில்...
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், பிக் பில்லியன் டே விற்பனையை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் ஐபோன் 13, சாம்சங் கேலக்ஸி F54, பிக்சல் 7a உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட்போன்கள் வரவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையின்போது குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் நிறுவனமானது விற்பனை தேதியை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் எதிர்பார்ப்புகள் அதன் மீதான அதிகரித்துள்ளது. உத்தேச தேதிகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையின் டீஸர், பிளிப்கார்ட் இணையதளம் தள்ளுபடி செய்யப்படும் போன்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட டீல்களை குறிப்பிடவில்லை.
எனவே, தற்போது ஆப்பிள் ஐபோன் சுமார் 7,401 ரூபாய் குறைக்கப்பட்டு, 52,499 ரூபாய் என்ற எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் பிக் பில்லியன் டே விற்பனையின் போது இன்னும் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | யூடியூப் அறிமுகப்படுத்தும் AI கருவிகள்! அனைவரும் படைப்பாளியாகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ