காசு காணாம போயிரும்... இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க - மக்களை எச்சரிக்கும் அரசு!
Cyber Awareness Month: சைபர் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் இந்த வேளையில், இணைய மோசடிகளில் இருந்து சிக்காமல் மக்கள் தப்பிப்பது எப்படி என்பதை இதில் காணலாம்.
Cyber Awareness Month: சைபர் விழிப்புணர்வு என்பது இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்போதைய காலத்தில் இணையத்தில் கால்பதிக்காத நபர்களே இல்லை எனலாம். எந்தளவிற்கு இணைய பயன்பாடு உயர்ந்துள்ளதோ, அந்தளவிற்கு அதுசார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது எனலாம். வங்கி மோசடி, தனிப்பட்ட டேட்டா திருட்டு முதல் பல பாதிப்புகளை எளிய மக்களில் இருந்து அனைத்து தரப்பினரும் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பு அக்டோபர் மாதத்தை சைபர் விழிப்புணர்வு மாதமாக இந்திய அரசு அனுசரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், ஆன்லைனில் இருக்கும் பயனர்களுக்கு அரசாங்கம் சில எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் சைபர் மோசடிகளில் சிக்காமலும் தவிர்க்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், சைபர் குற்றவாளிகள் என்றழைக்கப்படும் ஹேக்கர்கள் தனிநபரின் மின்னஞ்சல், செய்திகள், அழைப்புகள் மூலம் குறிவைக்கிறார்கள்.
மக்கள் செய்யும் சிறிய தவறு என்பது ஹேக்கர்களுக்கு சைபர் குற்றங்களை செய்ய பெரிய வாய்ப்பை வழங்குகிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது. இத்தகைய சூழ்நிலையில், டிஜிட்டல் உலகில் நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அரசு கொடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால். டிஜிட்டல் உலகில் உள்ள சைபர் குற்றவாளிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இணைய மோசடிகளில் சிக்கவதில் இருந்து தவிர்ப்பதற்கான வழிகளை அரசாங்கத்தின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT - Computer Emergency Response Team) மக்களுக்குக் கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஆப்பிள் வெறியர்களுக்கு ஒரு நற்செய்தி... இன்று அறிமுகமாகும் iPad? - முழு விவரம்
எந்தவொரு அவசர செய்தி அல்லது எச்சரிக்கை சார்ந்த வலையிலும் மக்கள் சிக்கிவிடக் கூடாது என்று CERT-In மக்களை எச்சரித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் வங்கி, மொபைல் அல்லது கடன் என்ற பெயரில் எச்சரிக்கை செய்திகளை அனுப்பி மக்களை மோசடி வலையில் சிக்கவைப்பார்கள். சைபர் குற்றவாளிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க சில தந்திரங்களைக் கையாள்வதாகவும் CERT கூறுகிறது.
இணைப்பை கிளிக் செய்யவே செய்யாதீர்கள்
சைபர் குற்றவாளிகள் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகள் மூலம் வங்கி விவரங்களைப் புதுப்பிக்கும்படி மக்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். அந்தச் செய்தியில், தனிப்பட்ட தகவல்களை உடனடியாக அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களின் வங்கி கணக்கு மூடப்படும் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியாது எனவும் அதில் கூறப்படும்.
மக்கள் அந்த செய்தியை பார்த்ததும் பயந்து, கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்குப் பிறகு, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சைபர் குற்றவாளிகளுக்கு கிடைத்துவிடுகிறது. இதன்மூலம் அவர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். மெசேஜில் வரும் இணைப்பைக் கிளிக் செய்துவிட்டாலே, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சைபர் குற்றவாளிகளின் இணையதளத்தை சென்றடையும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. எனவே, இணைப்பைக் கிளிக் செய்யவே செய்யாதீர்கள்.
இலவசங்களுக்கு இரையாகாதீர்கள்...
KYC புதுப்பித்தல் என்ற பெயரில் கூட, சைபர் குற்றவாளிகள் மக்களுக்கு போலி இணைப்புகளை அனுப்பி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் இலவச பரிசுகளால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்காக, நபர்களுக்கு இணைப்புகள் அனுப்பப்பட்டு, தொலைபேசி எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு போன்ற தனிப்பட்ட தகவல்களை தேடுகின்றன. பயனர்கள் சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகி, இந்தத் தகவல்களை நிரப்பி மோசடிக்கு ஆளாகிறார்கள்.
அத்தகைய மின்னஞ்சல் அல்லது செய்தியை புறக்கணிக்குமாறு CERT-In கூறியது. வங்கி விவரங்கள் போன்றவற்றைப் புதுப்பிக்க, பயனர்கள் அருகிலுள்ள கிளைக்குச் செல்லலாம். தெரியாத எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் இணைப்பு அல்லது இணைப்பை திறக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ