K Light 250V: கீவே K-லைட் 250V இந்தியாவில் அறிமுகமானது: 250சிசி குரூஸர்
ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி: ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பைக் மேட் ப்ளூ, மேட் கிரே மற்றும் மேட் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய பைக் ராயல் என்ஃபீல்டு மீடியர் 350, ஜாவா பெராக் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும்.
மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது கீவே கே-லைட் சிறிய 250சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
K-Light 250V பெல்ட் டிரைவ் சிஸ்டத்துடன் இணைந்து 250cc V-ட்வின் சிலிண்டர் எஞ்சினைப் பெற்ற முதல் பைக் என்று தயாரிப்பு நிறுவனம் கீவே கூறுகிறது.
வி-ட்வின் அதிகபட்சமாக 8500 ஆர்பிஎம்மில் 18.7 ஹெச்பி ஆற்றலையும், 5500 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 19என்எம் முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. மோட்டார்சைக்கிளில் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்
பைக்கில் நிமிர்ந்த கைப்பிடியுடன் வழக்கமான க்ரூஸர் போன்ற இருக்கையும் இடம் பெற்றுள்ளது. பைக்கில் எளிதாக சவாரி செய்ய கான்டூர்ட் இருக்கை உதவுகிறது. மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின்புற ஹைட்ராலிக் சஸ்பென்ஷனில் டூயல் டெலஸ்கோபிக் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.
வட்ட வடிவ DRLஆல் கட்டமைக்கப்பட்ட LED ஹெட்லைட் பொருத்தப்பட்ட இந்த பைக்கின் ஹெட்லேம்ப்பின் வடிவம் கிளாசிக் ஆலசன் ஹெட்லேம்ப்களுக்கு ஒரு த்ரோபேக்காக இருக்கும். டெயில் லைட் எல்இடியையும் பயன்படுத்துகிறதும் பயன்படுத்தும் இந்த பைக், K-Light 250V 20 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மேலும் 5 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்த க்ரூசர் வாகனத்துக்கு பிறகு, இரண்டு ரெட்ரோ ஸ்ட்ரீட் கிளாசிக், மற்றும் ஒரு ரேஸ் பைக்கையும் வெளியிடவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.
வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் எங்களது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 100 டீலர்களை நியமிக்கவும் ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR