உங்கள் ஃபோனை அப்டேட் செய்யாவிட்டால், காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!
smartphone Update: உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை (Software) நீங்கள் நீண்ட காலமாகப் அப்டேட் செய்யாமல் இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு உடைந்து போகக்கூடும்.
Smartphone Update: சில ஸ்மார்ட்போன் யூசர்கள் தொலைபேசி மென்பொருள் (Software) அப்டேட்களை புறக்கணிக்கின்றனர். இதைச் செய்வது மிகவும் பொதுவானதாகத் தோன்றலாம், ஆனால் அதன் யதார்த்தத்தை அறிந்தால் நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள். நீண்ட காலமாக மென்பொருளை அப்டேட் செய்யாமல் இருப்பது உங்கள் போனில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்டேட் செய்வதால் ஸ்மார்ட் போனின் ஸ்டோரேஜ் குறைகிறது என்று யூசர்கள் கருதுகின்றனர். ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு போனை அப்டேட் செய்யாததால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
மதர்போர்டு பிரச்சனை
நீங்கள் நீண்ட காலமாக உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளைப் புதுப்பிக்காமல் புறக்கணித்தால், உங்கள் ஸ்மார்ட்போனின் மதர்போர்டு பிரச்சனையாகி வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் ஸ்மார்ட்போன் எந்த காரணத்திற்காகவும் இயங்காது. இதனால் அந்த மொபைலில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியாது, யாருக்கும் ஒரு மெசேஜ்கூட அனுப்ப முடியாது.
அதிக சூடு பிரச்சனை
எந்த ஒரு ஸ்மார்ட்போனின் மென்பொருளையும் அப்டேட் செய்யும் போதெல்லாம் ஸ்மார்ட்போனின் வேகம் அதிகரிக்கிறது மற்றும் வேகம் அதிகரிப்பதால் சூடாக்கும் பிரச்சனை குறைகிறது. ஆனால் ஸ்மார்ட்போன் அப்டேட்களை தொடர்ந்து புறக்கணித்தால் பிரச்சனை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். சீக்கிரமாக சூடாகும் பிரச்சனை ஸ்மார்ட்போனில் ஏற்படும். அதிலிருந்து ஹேங்கிங் பிரச்சனை வரத் தொடங்கும்.
மொபைல் ஸ்லோவாகும்
ஸ்மார்ட்போனின் மென்பொருள் புதுப்பிப்புகளை நீங்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் போது, ஸ்லோவாகும். அதனால் நீங்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியாது. மேலும் கேம்களை விளையாடுவதிலும் அல்லது வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலும் நீங்கள் சிக்கலை எதிர்கொள்வீர்கள். உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாகும் சிக்கலில் இருந்து விடுபட விரும்பினால், உங்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்யுங்கள்.
ஸ்மார்ட்போன் வெடிக்கலாம்
உங்கள் ஸ்மார்ட்போனின் மென்பொருளை நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால், அதில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும், அதில் அதிக சூடாகும் பிரச்சனை கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த பிரச்சனை தொடரும் போது அது பேட்டரியையும் பாதிக்கிறது. ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகமாகி சூடாகிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அது வெடிக்கலாம்.
மேலும் படிக்க | இரவில் ஏசி பயன்படுத்தும் போது சீலிங் ஃபேனை ஆன் செய்ய வேண்டுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ