Ceiling Fan While Using AC: ஏசியைப் பயன்படுத்தும் போது சீலிங் ஃபேன்களை அணைக்க வேண்டும் என்ற தவறான தகவல் மக்களிடம் இருந்து வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. வெயிலை சமாளிக்க பலரது வீடுகளிலும் தற்போது ஏசி உள்ளது. இன்றைய காலத்தில் மக்கள் ஏசிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற வீடுகளில் போலவே கிராம புறங்களிலும் அதிக பயன்பாடு உள்ளது.
நிறைய வீடுகளில் ஏசி மற்றும் சீலிங் ஃபேன் இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் ஏசியை பயன்படுத்தும் போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்த கூடாது என்ற தவறான தகவல் உள்ளது.
உண்மையில் பேன் மற்றும் ஏசிகளை ஒன்றாகப் பயன்படுத்தும் போது அறையின் வெப்பநிலை விரைவாக வெளியேறி உடனே கூலிங்கை தெரிகிறது.
ஏசியுடன் பேனை பயன்படுத்தும் போது 18 அல்லது 20 டிகிரியில் வைக்க தேவையில்லை. மாறாக 24ல் வைத்தால் கூட உடனடி கூலிங் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, ஏசியுடன் பேனை பயன்படுத்தினால் 12–20 சதவீதம் வரை மின் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்.